
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoதொலைவு / இடப்பெயர்ச்சி அல்லது வேகம் / திசைவேகம் சார்ந்த வரைபடத்தை வரைவதிலிருந்து காலம் மற்றும் நிலை பற்றிய கருத்துக்களை நாம் புரிந்து கொள்ள முடியும்.
சீரான இயக்கத்திற்கான தொலைவு – காலம் வரைபடம்:
வெவ்வேறு காலத்தில் ஒரு நபர் நடந்த தூரமானது கீழே உள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காலம் (நிமிடத்தில்) | தொலைவு (மீட்டர்) |
0 | 0 |
5 | 500 |
10 | 1000 |
15 | 1500 |
20 | 2000 |
25 | 2500 |
நடக்க எடுத்துக்கொண்ட காலத்தை X - அச்சில் குறிக்க வேண்டும். கடந்த தொலைவை Y – அச்சில் குறிப்பிட்டு ஒரு வரைபடம் வரைந்தால், அந்த வரைபடம் தொலைவு – கால வரைபடம் எனப்படும்.

தொலைவு – கால வரைபடம்
தொலைவு – கால வரைபடத்தைக் கவனித்தால் நாம் சில கருத்துக்களைப் புரிந்து கொள்ள முடியும்.
- முதலாவதாக, அந்த நபர் கடந்த தொலைவிற்கும் காலத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு வரைபடத்தாளில் ஒரு நேர்கோடாக இருக்கிறது.
- அவர் சமகால இடைவெளிகளில்சம தொலைவுகளைக் கடந்து சென்றதையும் நம்மால் அறிந்து கொள்ள முடியும். இதிலிருந்து அந்த நபர் மாறாத வேகத்தில் நடந்து சென்றதை நாம் கண்டுப்பிடிக்க முடியும்.