PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இந்த அண்டத்திலுள்ள அனைத்துப் பொருட்களும் இயக்கத்தில் தான்  உள்ளன. ஒரு சில  பொருளானது இயங்காதது போல் தோன்றினாலும், உண்மையில் அவையும் இயக்கத்தில் தான் உள்ளது.
 
அது எப்படி?
 
பூமி ஓய்வு நிலையில் இருப்பது போல் தோன்றினாலும் அவை இயங்கி கொண்டே தான் இருக்கிறது. ஏனெனில், பூமியானது சூரியனைச் சுற்றி வருகிறது.  
ஒரு பொருளின் சுற்றுப்புறத்தைப் பொறுத்து அதன் நிலையில் ஏற்படும் மாற்றமே இயக்கம் எனப்படும்
உங்களைச் சுற்றியுள்ள பொருள்கள், இயக்கத்தில் இருப்பதைக் காணலாம். பள்ளியிலிருந்து வீட்டிற்குச் செல்லும்போது, சாலையில் ஓடும் போது, மூடிய கதவைத் தள்ளித் திறக்கும் போது, பள்ளி மேசையிலிருந்து எழுந்திருக்கும் போது, இப்படி அனைத்திலும் இயக்கம் இருக்கத்தான் செய்கிறது.
 
shutterstock_475612642.jpg
சாலையில் ஓடுதல்
  • வாகனங்கள் சாலையில் செல்லுதல், தொடர் வண்டி தண்டவாளத்தில் செல்லுதல், விமானம் வானத்தில் பறப்பது ஆகிய அனைத்தும் இயங்குகின்றன. இவை அனைத்தும் ஒரு வகை இயக்கமாகும்.
  • வீட்டின் மேற்கூரை மீது மின்விசிறியானது சுற்றுவதைப் பார்த்திருப்பீர்கள். இது மற்றொரு வகை இயக்கமாகும்.
  • நீங்கள் ஊஞ்சலில் ஆடும்போது, அது முன்னும், பின்னும் செல்கிறது. இதுவும் ஒரு வகை இயக்கம் ஆகும்.
இயக்கமானது, தொலைவு, வேகம், முடுக்கம் மற்றும் காலம் ஆகியவற்றால் வரையறை செய்யப்படுகிறது.