PDF chapter test TRY NOW
ஓய்வு நிலை:
ஒரு பொருளின் ஓய்நிலை என்பது அப்பொருளின் நிலை மாறாமல் இருப்பது ஆகும்.
Example:
ஒரு மேசையின் மேல் இருக்கும் அலைபேசி
இயங்காமல் சாலையில் நிற்க்கும் வாகனங்கள்
இயக்கநிலை:
ஒரு பொருளின் இயக்க நிலை என்பது பொருட்கள் அதன் நிலையிலிருந்து மாறிக் கொண்டே இருப்பது ஆகும்.
Example:
சாலையில் ஓடுகின்ற நபர்
பேருந்துகள், காற்று வெளியில் பறந்து கொண்டிருக்கின்ற பறவைகள் மற்றும் விமானங்கள் ஆகியவை இயக்க நிலையில் உள்ளன.
இயக்கம்:
இயக்கம் என்பது ஒரு சார்பியல் நிகழ்வு ஆகும். அதாவது ஒரு மனிதருக்கு இயக்கத்தில் இருப்பது போலத் தோன்றுகின்ற ஒரு பொருளானது, வேறொரு மனிதருக்கு ஓய்வு நிலையில் இருப்பது போலத் தோன்றும்.
Example:
தொடர் வண்டியில் செல்லும் மனிதருக்கு சாலையின் ஓரத்தில் இருக்கும் மரங்கள் பின்னோக்கி நகர்வது போலத் தோன்றும்.
ஆனால், சாலையில் நின்று கொண்டிருக்கும் ஒரு மனிதருக்கு அதே மரங்கள் நகராமல் இருப்பது போல் தோன்றும்