PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஒரு பொருள் எவ்வளவு விரைவாக இயங்குகிறது என்பதை குறிப்பதே வேகம் எனப்படும்
வேகம் என்பது தொலைவின் மாறுபாட்டு வீதம் அல்லது ஓரலகு நேரத்தில் கடந்த தொலைவு எனப்படும்.
வேகம் என்பது ஒரு அளவிடல் அளவாகும், இது எண்மதிப்பை மட்டும் கொண்ட திசையிலி (ஸ்கேலார்) அளவுரு ஆகும்.
\(SI\) அளவீட்டு முறையில் வேகத்தின் அலகு ஆகும்.
\(\text{வேகம்}\) \(=\)
வேகம் மற்றும் நேரத்தைப் பயன்படுத்தி தூரத்தைக் கணக்கிட விரும்பினால், பின்வரும் சூத்திரத்தைப் பயன்படுத்தலாம்.
\(\text{தூரம்}\) \(=\)
வேகத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவைகள் முறையே,
- சீரான வேகம்
- சீரற்ற வேகம்
இயக்கத்தில் உள்ள ஒரு பொருள் சமமான இடைவெளியில் சமமான தூரத்தை கடந்து சென்றால், அந்த பொருள்சீரான வேகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
Example:
இரத்த ஓட்டம், மின்விசிறி மற்றும் மிக்சரின் இயக்கம், பூமியும் சந்திரனும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வேகத்தில் சுழல்கின்றன
சீரற்ற வேகம்:
ஒரு பொருள் சம கால இடைவெளியில் சமமற்ற தூரத்தை கடந்து சென்றால், அந்த பொருள்சீரற்ற வேகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
Example:
பேருந்து நிறுத்தத்திலிருந்து புறப்படும் பேருந்து, காற்றில் வீசப்பட்ட பொருள், சீரற்ற வேகத்தில் நகரும் மகிழுந்து
சராசரி வேகம்:
ஒரு பொருளின் சராசரி வேகம் என்பது அந்த பொருள் பயணிக்கும் மொத்த தூரத்திற்கும், அந்த தூரத்தை கடப்பதற்கு எடுத்துக் கொண்ட நேரத்துக்கும் உள்ள தகவாகும். அதாவது,
சராசரிவேகம் \(=\)