PDF chapter test TRY NOW

தொலைவு :
 
ஒரு பொருள் பயணிக்கும் திசையை குறிப்பிடாமல், அப்பொருள் கடந்த பாதையின் நீளமே, அப்பொருள் கடந்த தொலைவு எனப்படும்.
 
தொலைவின்  \(SI\) அலகு ’மீட்டர்’ ஆகும். தொலைவில் எண் மதிப்பை மட்டுமே அளவிட முடியும். எனவே, தொலைவு ஒரு திசையிலி (ஸ்கேலார்) அளவுரு ஆகும்.
 
இடப்பெயர்ச்சி:
 
ஒரு குறிப்பிட்ட திசையில், இயங்கும் பொருளொன்றின் நிலையில் ஏற்படும் மாற்றமே இடப்பெயர்ச்சி ஆகும். இரு புள்ளிகளிடையேயான மிகக்குறுகிய தூரம் இடப்பெயர்ச்சி (displacement)எனப்படும்.
 
இது எண் மதிப்பு மற்றும் திசை ஆகிய இரண்டையும் கொண்ட திசையளவுரு (வெக்டர்) ஆகும். \(SI\) அலகு முறையில் இடப்பெயர்ச்சியின் அலகும் மீட்டர் ஆகும்.
 
YCIND070620223850Forceandmotion4w1521.png
மாதிரி வரைப்படம்
 
\(A\) என்ற ஒரு புள்ளியிலிருந்து ஒரு பொருள் ஒரு குறிப்பிட்ட பாதையில் நகர்ந்து \(B\) என்ற புள்ளியை அடைகின்றது.
 
\(A\) என்ற புள்ளியிலிருந்து \(B\) என்ற புள்ளி வரை அப்பொருள் கடந்த மொத்த நீளம் அப்பொருள் கடந்த தொலைவு ஆகும்.
 
\(AB\) என்ற கோட்டின் நீளம் இடப்பெயர்ச்சி ஆகும்.