PDF chapter test TRY NOW

முடுக்குவிக்கப்பட்ட இயக்கத்திற்கான தொலைவு - காலம் வரைபடத்தையும் நாம் வரையலாம்
 
கீழே உள்ள அட்டவணையானது, ஒரு மகிழுந்து இரண்டு விநாடிகால இடைவெளிகளில் கடந்து சென்ற தொலைவைக் காட்டுகிறது. 
 
காலம்
(நிமிடத்தில்)
தொலைவு
(மீட்டர்)
0
0
2
1
4
4
6
9
8
16
10
25
12
36
 
கடந்த தொலைவு மற்றும் எடுத்துக் கொண்ட நேரம் ஆகியவற்றிற்கான ஒரு வரைபடத்தை நாம் வரைந்தால் அது கீழே உள்ளது போல் அமையும்.
 
YCIND16052022_3761_Motion (TN 9th Tamil)_3.png
தொலைவு -காலம் வரைப்படம்
  • மேலே உள்ள இந்த தொலைவு - காலம் வரைப்படம்சீரான இயக்கத்தில் கிடைத்த நேர்கோடு போல இல்லை.
  • இந்த வரைபடமானது, கடந்த தொலைவு மற்றும் எடுத்துக்கொண்ட நேரத்திற்கான, நேரியல் சார்பற்ற (non linear) மாற்றத்தைக் குறிக்கிறது. எனவே, இந்த வரைபடம் ஒரு சீரற்ற வேகத்திற்கான இயக்கத்தைக் காட்டுகிறது.