PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஒரு பொருள் சீரான திசைவேகத்தில் செல்லும்போது, அதன் திசைவேகத்தையும் கால இடைவெளியையும் பெருக்கினால், கிடைப்பது அப்பொருளின் இடப்பெயர்ச்சி ஆகும்.
- ஒரு பொருளின் திசைவேகம் காலத்தைச் சார்ந்து எப்படி மாறுகிறது என்பதை திசைவேகம் - காலம் வரைபடத்திலிருந்து நம்மால் அறிய முடியும்.
- இந்த வரைபடத்தில் காலம் \(X\) அச்சிலும், திசைவேகம் \(Y\) அச்சிலும் குறிப்பிட வேண்டும்.
- ஒரு பொருள் சீரான திசைவேகத்தில் சென்றால் \(X\) அச்சுக்கு இணையான ஒரு நேர்கோடு கிடைக்கும்.
- கீழே உள்ள வரைபடம் மகிழுந்து ஒன்று \(40\) \(\text {கி.மீ. / மணி}\) என்ற சீரான திசைவேகத்தில் பயணிப்பதைக் காட்டுகிறது.
திசைவேகம் – காலம் வரைபடம்
எனவே, திசைவேகம் – காலம் வரைகோட்டில் கிடைக்கும் பரப்பளவு இடப்பெயர்ச்சியின் எண் மதிப்பிற்குச் சமமாகும். ஆகவே \(t\) என்ற கால இடைவெளியில், மகிழுந்தின் இடப்பெயர்ச்சி \(S\) கீழ் கண்டவாறு கணக்கிடப்படுகிறது.
\(S\) \(=\) \(AC\) \(\times\) \(CD\)
\(S\) \(=\) செவ்வகம் \(ABCD\)-ன் பரப்பளவு
வரைபடத்தில் நிழலாக்கப்பட்ட பகுதி தான் செவ்வகம் \(ABCD\)-ன் பரப்பளவு ஆகும்.