PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நாம் இதற்கு முன் பார்த்த சீரான வட்ட இயக்கத்துக்கு உதாரணமான செயல்பாட்டை கொண்டே மையநோக்கு முடுக்கம்  மற்றும் மைய நோக்கு விசையை புரிந்துக் கொள்வோம்.
 
ஒரு பொருளினுடைய திசைவேகத்தின்எண் மதிப்பு அல்லது திசை அல்லது இரண்டுமே மாறுபட்டால் அப்பொருள் முடுக்கப்படுகிறது எனலாம். ஆகவே, வட்டப்பாதையில் மாறாத வேகத்தில் செல்லும் கல் ஒன்று முடுக்கப்பட்ட இயக்கத்தைக் கொண்டுள்ளது.
 
YCIND18052022_3761_Motion (TN 9th Tamil)_1.png
 
இங்கு கயிற்றின் வழியே செயல்படும் உள்நோக்கிய முடுக்கமானது கல்லை வட்டப்பாதையில் இயங்க வைக்கிறது. இந்த முடுக்கத்தை மையநோக்கு முடுக்கம் என்றும் அதனுடன் தொடர்புடைய விசையை மையநோக்கு விசை என்றும் கூறுகிறோம்.
 
YCIND18052022_3761_Motion (TN 9th Tamil).png
 
மையநோக்கு முடுக்கம் வட்டத்தின் மையத்தை நோக்கி செயல்படுவதால் மையநோக்கு விசையும் ஆரத்தின் வழியே அதே திசையில் பொருளின் மீது செயல்படும்.
 
’\(m\)’ நிறை உடைய ஒரு பொருள், ‘\(r\)’ ஆரமுடைய ஒரு வட்டப் பாதையில், ‘\(v\)’ திசைவேகத்தில்செல்வதாகக் கருதினால், அதன் மையநோக்கு முடுக்கமானது,
 
\(a\) \(=\) v2r
 
மையநோக்குவிசையின் எண் மதிப்பு,
 
 \(F\) \(=\) \(\text {நிறை}\)\(\times\)\(\text{மைய நோக்கு முடுக்கம்}\)
  
\(F\) \(=\) mv2r
ஈர்ப்பு விசை, உராய்வு விசை, காந்த விசை, நிலை மின்னியல் விசை மற்றும் இதுபோன்ற எந்த ஒரு விசையும் மையநோக்கு விசை போன்று செயல்படும்.