PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஒரு பொருளின் இயக்கம் எப்பொழுது சீரான வட்ட இயக்கமாக இருக்கும் என்பதை ஒரு செயல்பாட்டை கொண்டு புரிந்துக் கொள்ளலாம்.
  • ஒரு நூலை எடுத்துக் கொள்ள வேண்டும் . அதன் ஒரு முனையில் ஒரு சிறிய கல்லினை கட்ட வேண்டும்.
  • அக்கல்லானது வட்டப்பாதையில் மாறாத வேகத்தில் சுற்றுமாறு கயிற்றின் மற்றொரு முனையைக் கொண்டு சுழற்ற வேண்டும்.
  • பிறகு, நூலைக் கையிலிருந்து விடுவிக்கும் போது கல்லானது விலகிச் செல்கிறது.
கயிற்றை விடுவித்த பின்பு  கல்லானது வட்டப்பாதையின் தொடுகோட்டின் வழியே நேர்கோட்டில் இயங்கும். ஏனெனில் கல்லை விடுவிக்கும் காலத்தில் அதனை எத்திசையில் விடுவித்தோமோ அதே திசையில் சென்று கொண்டிருக்கும்.
 
YCIND18052022_3761_Motion (TN 9th Tamil)_2.png
சீரான வட்ட இயக்கம்
  • ஒரு பொருள் வட்ட வடிவப் பாதையில் செல்லும்போது அதன் திசை ஒவ்வொரு புள்ளியிலும் மாறிக் கொண்டே இருக்கும் என்பது தெளிவாகிறது.
  • பொருள் ஒன்று வட்டப்பாதையில் மாறாத வேகத்தில் செல்லும் பொழுது, திசை மாறுவதால், திசைவேகமும் மாறுகின்றது. எனவே, இது ஒரு முடுக்குவிக்கப்பட்ட இயக்கமாகும்.
Example:
பூமிசூரியனைச் சுற்றி வருவதல்,  நிலவு பூமியைச் சுற்றி வருவதல், கடிகாரத்தின் வினாடி முள்ளின் இயக்கம் ஆகியவை சீரான வட்ட இயக்கங்களாகும்.
‘\(r\)’ ஆரம் கொண்ட வட்டப் பாதையில் சுற்றிவரும் ஒரு பொருளானது, ஒரு சுற்றுக்குப்பின் தொடக்க நிலைக்கு திரும்பிவர எடுத்துக்கொண்ட காலம் ‘\(T\)’ எனில் அதன் வேகம் ’\(V\)’ பின்வருமாறு கணக்கிடப்படுகிறது.
 
வேகம் V = சுற்றளவுஎடுத்துக்கொண்ட காலம் 
 
வட்டத்தின் சுற்றளவு \(= \) \(2πr\)
 
வேகம்V=2πrT