PDF chapter test TRY NOW
மெண்டெலீவின் தனிம வரிசை அட்டவணை:
1869, ஆம் ஆண்டு இரஷிய வேதியலாளர் டிமிட்ரி மெண்டெலீவ் தனிமங்களின் பண்புகள், அவை அணு நிறையின் அடிப்படையில் அடுக்கப்படும் போது ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் வருவதைக் கண்டறிந்தார். இதன் அடிப்படையில் இவர் தனிம ஆவர்த்தன விதியை உருவாக்கினார்.
டிமிட்ரி மெண்டெலீவ்
இந்த விதி "தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் அணு நிறைகளை பொருத்து ஆவர்த்தன முறையில் மாற்றம் அடைகிறது” எனக் கூறுகிறது.
இவர் அந்த நேரத்தில் அறியப்பட்ட \(56\) தனிமங்களை இந்த விதியின் அடிப்படையில் அமைத்தார். இது தனிம அட்டவணையின் சுருக்கம் எனப்படுகிறது.
மெண்டெலீவ் ஆவர்த்தன அட்டவணை: