PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
மெண்டெலீவ் தனிம வரிசை அட்டவணையின் சிறப்புகள்:
 
MendeleevsPeriodicTable.png
மெண்டெலீவின் தனிம வரிசை அட்டவணை
  • இதில் எட்டு நீண்ட செங்குத்து தொகுதிகளும் ஏழு படுக்கை அல்லது கிடைமட்ட தொடர்களும் காணப்படுகின்றன.
  • தொடர்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் இரண்டு துணைத் தொகுதிகள் \(A\) மற்றும் \(B\) உண்டு. ஒரு தொகுதியில் உள்ள எல்லா தனிமங்களும் ஒத்த பண்பினைப் பெற்றிருக்கும்.
  • முதன் முறையாக தனிமங்கள் விரிவாக சரியான முறையில் வகைப்படுத்தப்பட்டன. இதனால் ஒத்த பண்புகளை உடைய தனிமங்கள் ஒரே தொகுதியில் வைக்கப்பட்டன. இது வேதியியல் ஆய்வை எளிதாக்கியது.
  • ஒத்த பண்புகளை உடைய தனிமங்கள் ஒரே தொகுதியில் வைக்கப்பட்டு வகைப் படுத்தப்பட்ட போது சில தனிமங்கள் அவற்றிற்கான தொகுதியில் வைக்கப்பட முடியாமல் போனது கண்டறியப்பட்டது. ஏனெனில் அவற்றிற்கென்று தீர்மானிக்கப்பட்ட அணு நிறை தவறு ஆகும். இது கண்டறியப்பட்டு பின் இந்த தவறு சரி செய்யப்பட்டது. எ.கா. முதலில் பெரிலியத்தின் அணு நிறை \(14\) என அறியப்பட்டது பின் மெண்டெலீவ் மறுபடியும் ஆராய்ந்து அணு நிறை \(9\) எனக் கண்டறிந்து சரியான தொகுதியில் அதை அமைத்தார்.
  • அந்த நேரத்தில் கண்டுப்பிடிக்கப்படாத பல தனிமங்களுக்கு என்று அட்டவணையின் பத்தியில் காலி இடம் விடப்பட்டது. அவற்றின் பண்புகள் கூட முன்னறியப்பட்டதாக அமைந்தது. இது வேதியியல் ஆராய்ச்சியை இன்னும் தூண்டுவதாக அமைந்தது. எ.கா. மெண்டெலீவ், அலுமினியம் மற்றும் சிலிகானுக்குக் கீழே வரக்கூடிய தனிமங்களுக்கு எ.கா. அலுமினியம் மற்றும் எ.கா. சிலிகான் எனப் பெயரிட்டார். மேலும் அவற்றின் பண்புகள் இப்படித்தான் இருக்கும் என முன்னறிவித்தார். அவரது காலத்திலேயே பின்னர் கண்டுப்பிடிக்கப்பட்ட ஜெர்மானியம் அவரின் கூற்று சரி என்று நிரூபித்தது.