PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கொழுப்பில் கரையும் வைட்டமின்களான வைட்டமின் \(E\) மற்றும் \(K\) குறித்துப்  பின்வருமாறு காணலாம்.
 
வைட்டமின் E (டோகோபெரால்):
 
வைட்டமின் \(E\) இதய நோய்களைத் தடுக்கவும், தோல் பளபளப்பிற்கும், இனவிருத்தி செயல்பாடுகளுக்கும் மிக முக்கியமானது.
 
வைட்டமின் E நிறைந்த உணவுகள்:
 
முழு கோதுமை, இறைச்சி, பச்சைக் காய்கறிகள், ஆப்பிள், மாம்பழம், தாவர எண்ணெய், சூரியகாந்தி விதைகள்.
 
shutterstock380849872w400.jpg
வைட்டமின் E உணவு மூலங்கள்
 
குறைபாட்டு நோய்கள்:
  • ஆண் மற்றும் பெண்களில் மலட்டுத்தன்மை ஏற்படுதல்.
  • உடலில் உள்ள நரம்பு பலவீனம் அடைவதால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல்.
  • ஆண் பெண் இருபாலரிலும் இனப்பெருக்க கோளாறுகள் ஏற்படுதல்.
அறிகுறிகள் :
  • மலட்டுத்தன்மை
வைட்டமின் K (குயினோனில் இருந்து பெறப்படுகின்றது):
 
காயம் ஏற்பட்டால் இரத்தம் உறைவதற்கும் மேலும் அதிக இரத்த போக்கைத்  தடுக்கவும் இந்த வைட்டமின் பயன்படுகின்றது.
 
வைட்டமின் K நிறைந்த உணவுகள்:
 
தக்காளி, முட்டைக்கோசு, பச்சைக் காய்கறிகள், முட்டை, பால் பொருட்கள், சோயா பீன்ஸ்.
 
shutterstock1300276171w400.jpg
வைட்டமின் K சத்து உணவு மூலங்கள்
 
குறைபாட்டு நோய்கள்:
  • எலும்புகள் மற்றும் பற்கள் பலவீனம் அடைதல்.
  • காயம் ஏற்பட்ட பின்னர் இரத்தம் உறைதல் ஏற்படாது.
 அறிகுறிகள்:
  • சிறிய காயம் எனினும் அதிக இரத்தக் கசிவு ஏற்படுதல்.