PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoவைட்டமின்கள், கரையும் தன்மையை பொறுத்து இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் நீரில் கரையும் வைட்டமின்களில் வைட்டமின் \(B\) மற்றும் அதன் வகைகள் குறித்துப் பின்வருமாறு காணலாம்.
வைட்டமின் B:
வைட்டமின் \(B\) ஆரோக்கியமான நரம்பு மண்டலத்தைப் பேண மிகவும் அவசியமான ஒன்றாகும். உடலில் அதிக அளவில் சிவப்பு அணு உற்பத்தி செய்யவும் வைட்டமின் \(B\) தேவைப்படுகின்றது. மேலும், இது உடலின் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது.
வைட்டமின் B உணவு மூலங்கள்
வைட்டமின் \(B\) ஒரு கூட்டுக் குழுமம் ஆகும். இதில், பின்வரும் \(7\) வகைகள் உள்ளன.
- வைட்டமின் \(B1\)
- வைட்டமின் \(B2\)
- வைட்டமின் \(B3\)
- வைட்டமின் \(B5\)
- வைட்டமின் \(B6\)
- வைட்டமின் \(B9\)
- வைட்டமின் \(B12\)
வைட்டமின் \(B1\) (தயமின்):
உணவு வகைகள்:
முழு தானியங்கள், ஈஸ்ட், முட்டை, கல்லீரல், முளைக்கட்டிய பருப்பு வகைகள்
குறைபாட்டு நோய்: பெரி பெரி
அறிகுறிகள் :
- தசைகளில் வலிமையின்மை
- பக்கவாதம்
- நரம்புகளில் சிதைவுறும் மாற்றங்கள்
வைட்டமின் \(B2\) (ரிபோபிளவின்):
உணவு மூலங்கள்:
பால், முட்டை, கல்லீரல், பச்சைக் காய்கறிகள், முழு தானியங்கள்
குறைபாட்டு நோய்: எரிபோபிளாவினோஸிஸ் (கீலியாசிஸ்)
அறிகுறிகள்:
- கண்களில் எரிச்சல் ஏற்படுதல்
- தோல் வறட்சி
- உதடுகளில் வீக்கம் காணப்படுதல்
- வாயின் ஓரங்களில் பிளவு ஏற்படுதல்
வைட்டமின் \(B3\) (நியாசின்):
உணவு மூலங்கள்:
பால், முட்டை, கல்லீரல், வேர்க்கடலை, கொழுப்பு குறைந்து காணப்படும் இறைச்சி, உமி
வைட்டமின் B3 உணவு மூலங்கள்
குறைபாட்டு நோய் :பெலாக்ரா
அறிகுறிகள்:
- வாயின் ஓரத்தில் பிளவு ஏற்படுதல்
- தோல் தடித்தல்
- ஞாபக மறதி ஏற்படுதல்
- வயிற்றுப்போக்கு
வைட்டமின் \(B6\) (பைரிடாக்ஸின்):
உணவு மூலங்கள்:
இறைச்சி, மீன், முட்டை மற்றும் தானியங்களின் தவிடு
வைட்டமின் B6 உணவு மூலங்கள்
குறைபாட்டு நோய் : டெர்மாடிட்ஸ்
அறிகுறிகள் :
- தோல் செதில்கள் போல மாறுதல்
- நரம்பு குறைபாடுகள்
வைட்டமின் \(B12\) (சையனோகோபாலமைன்):
உணவு மூலங்கள்:
பால், இறைச்சி. கல்லீரல், பருப்புவகைகள், தானியங்கள், மீன்
வைட்டமின் B12 உணவு மூலங்கள்
குறைபாட்டு நோய் : உயிர் கொல்லும் இரத்த சோகை
அறிகுறிகள் :
- தண்டுவட நரம்பு செயல்பாட்டில் குறைபாடு
- அதிக இரத்த சோகை