PDF chapter test TRY NOW

உலகில் எந்த உயிரினமாக இருந்தாலும் உயிர் வாழ மிகவும் அவசியமான ஒரு அடிப்படைத் தேவை உணவு ஆகும்.
ஊட்டச்சத்திற்காக ஒரு உயிரினம் உட்கொள்ளும் எந்த ஒரு பொருளும் உணவு எனப்படும். அது தாவரம் அல்லது விலங்கிலிருந்து பெறப்படும் ஒரு பொருளாக இருக்கும்.
உணவின் பண்புகள்:
  • உடல் இயங்க தேவையான ஆற்றல் வழங்குதல்.
  • உடல் வளர்ச்சிக்கு உதவுதல் மற்றும் முன்னேற்றத்திற்கு உதவுதல். 
  • உடலில் சேதமான செல்கள் மற்றும் திசுக்களைப் புதுப்பித்தல்.
  • உடலை எவ்வித நோயும் அண்டாமல் பாதுகாத்தல்.
  • உடல் இயங்குவதற்குத் தேவையான அத்தியாவசிய சத்துக்களை அளித்தல்.
15w594.png
சரிவிகித உணவு
 
நோயைப் பரப்பும் நுண்ணுயிரிகளால் கெட்டுப் போன உணவை உண்பதன் மூலம் நமக்கு நோய்த்தொற்று, நஞ்சாதல் போன்றவை ஏற்படும். எனவே, உணவு பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம்.
 
தற்போது உணவு தயாரிப்பில் கலப்படம் என்பது அதிகமாக ஏற்பட்டு வருகின்றது. பொருளாதார லாபம், இதனை அடிப்படையாகக் கொண்டு தயாரிப்பு முதல் நுகர்வோர் கைக்குப் பொருள் செல்லும் வரை கலப்படம் நடைபெறுகின்றது.
 
கலப்படத்தில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருள் கலக்கப்படுகின்றது. சில சமயம் அவசியமான ஒரு பொருள் நீக்கப்படுகின்றது. இதனால் நுகர்வோரின் உடல் செயலியல் பாதிக்கப்படுகின்றது. உணவு உற்பத்தியின் தரத்தைப் பராமரிக்க பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டு உள்ளன.