PDF chapter test TRY NOW
நாம் உண்ணும் உணவில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவ்வாறு உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பின்வரும் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
- கார்போஹைட்ரேட்டுகள்
- புரதங்கள்
- கொழுப்புகள்
- வைட்டமின்கள்
- தாது உப்புக்கள்
கார்போஹைட்ரேட்டுகள்:
கார்போஹைட்ரேட்டுகள் என்பது கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் கலந்த கரிம கூட்டுப்பொருள் ஆகும்.
Example:
குளுக்கோஸ், சுக்ரோஸ், லாக்டோஸ், ஸ்டார்ச், செல்லுலோஸ்
கார்போஹைட்ரேட்டுகள்
வகைகள்:
கார்போஹைட்ரேட்டுகள் பின்வரும் மூன்று வகைகளாக வகைப் படுத்தப் பட்டுள்ளன.
- ஒற்றை சர்க்கரை மூலக்கூறு கொண்டவை - குளுக்கோஸ்
- இரட்டை சர்க்கரை மூலக்கூறு கொண்டவை - சுக்ரோஸ்
- கூட்டுச் சர்க்கரை மூலக்கூறு உடையவை - செல்லுலோஸ்
கீழ்க்காணும் இந்த வகைப்பாடு சர்க்கரையின் மூலக்கூறு அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
1. சர்க்கரை:
இவை நம் உணவுகளில் இயற்கையாகவே நிறைந்து உள்ள சர்க்கரையைக் குறிக்கும்.
Example:
பழங்கள், தேன், பீட்ரூட், கரும்பு சர்க்கரை
2. ஸ்டார்ச்:
ஸ்டார்ச் என்பது குளுக்கோஸின் பாலிமர் மூலக்கூறுகள் ஆகும்.
Example:
அரிசி, கோதுமை, சோளம், உருளைக்கிழங்கு
3. நார்ச்சத்து உணவுகள்:
நார்ச்சத்து உணவுகள் எளிதில் ஜீரணிக்க முடியாத சிக்கலான பாலிசாக்கரைடுகள் ஆகும் .
Example:
முழு தானியங்கள் மற்றும் கொட்டை வகைகள்
கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு நல்லது எனினும் அதிக அளவில் உட்கொள்ளும்போது சர்க்கரை நோய், உடல் பருமன், மேலும் பல உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.
நாம் உண்ணும் உணவில் அதிக அளவில் உள்ளது சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் ஆகும்.
கார்போஹைட்ரேட்டுகளின் உணவு மூலங்கள்:
தேன், கரும்பு, பழங்கள், முழுத்தானியங்கள், மாவுச்சத்து காய்கறிகள் போன்றவை கார்போஹைட்ரேட்டுகளின் உணவு மூலங்களாகும்.
Important!
ஒரு மனிதனுக்குத் தினசரி \(150 - 200\) கிராம் கார்போஹைட்ரேட்டு தேவைப்படும்.