PDF chapter test TRY NOW

வைட்டமின்கள் நம் உடலுக்குக் குறைந்த அளவில் தேவைப்படும் மிக முக்கியமான ஊட்டச்சத்தாகும். இவை உடலைப் பாதுகாக்கும் உணவுகள் ஆகும். மனித உடலில் நடைபெறும் குறிப்பிட்ட வேதியியல் மற்றும் செயலியல் மாற்றங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் வைட்டமின்கள் தேவைப்படுகின்றது.
 
4w446.png
தாதுக்கள் மற்றும் வைட்டமின்
மருத்துவர் கேசிமிர் ஃபன்க் என்பவர்  வைட்டமின்  என்ற வார்த்தையை முதன் முதலில் அறிமுகம் செய்தார். 
முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வைட்டமின், வைட்டமின் \(A\) என்பதால் ஆங்கில எழுத்தின் முதல் எழுத்து கொண்டு அதற்குப் பெயரிடப்பட்டது.
 
Important!
வைட்டமின் \(D\) மட்டுமே மனித உடலினால் உருவாக்கம் செய்யக் கூடிய ஒரே வைட்டமின் ஆகும்.
shutterstock1131287756w400.jpg
வைட்டமின் D சத்து உணவு மூலங்கள்
 
மனித உடலின் தோலின் மேல் சூரிய ஒளி படும்போது, வைட்டமின் \(D\) உருவாக்கப்படுகின்றது. அதுவும் குறிப்பாக அதிகாலை நேரத்தில் தான் வைட்டமின் \(D\) உருவாக்கம் உடலில் நடைபெறும். உடலில் உள்ள டிஹைடிரோ கொலஸ்டிரால் என்னும் பொருள் சூரியஒளி பட்டு வைட்டமின் \(D\) ஆக மாற்றம் அடைகின்றது.
 
எனவே, இது "சூரிய ஒளி வைட்டமின்" என்று அழைக்கப்படுகின்றது. இந்த வைட்டமின் உணவு வழியாக உட்கொள்ளப்படும் கால்சியம் கனிமத்தை உடல்   உறிஞ்சப் பெரிதும் உதவுகின்றது. மேலும் இந்த வைட்டமின் எலும்பினை பலப்படுத்தவும் உதவுகின்றது.
 
வைட்டமின்களின் வகைகள்:
 
வைட்டமின்கள் அவற்றின் கரையும் தன்மையைப் பொருத்து இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளன. அவை பின்வருமாறு,
 
நீரில் கரையும் வைட்டமின்கள்:
  • வைட்டமின் \(B\)
  • வைட்டமின் \(C\)
கொழுப்பில் கரையும் வைட்டமின்கள்:
  • வைட்டமின் \(A\)
  • வைட்டமின் \(D\)
  • வைட்டமின் \(E\)
  • வைட்டமின் \(K\)