PDF chapter test TRY NOW
உடலுக்கும் அதன் செயல்பாட்டுக்கும் தேவையான ஆற்றலை வழங்குவது கொழுப்புகள் ஆகும்.
கார்போஹைட்ரேட்டை விட ஆற்றல் அதிகம் வழங்கும் ஊட்டச்சத்து கொழுப்புகள் ஆகும்.
Example:
வெண்ணை, மீன், பால், நெய், பாலாடைக் கட்டி, முட்டை மஞ்சள் கரு, கொட்டைகள்.
Important!
ஒரு மனிதனின் தினசரி கொழுப்பு தேவை \(35\) கிராம் ஆகும்.
கொழுப்புகளின் பயன்கள்:
- உடல் வெப்பத்தைச் சீராக வைக்க உதவுகிறது.
- உடலில் உள்ள செல்களை பாதுகாக்கின்றது.
- உடலுக்குச் சக்தி கொடுக்கின்றது.
- உடலில் நடக்கும் வளர்சிதை மாற்ற பணிகளில் பங்கு பெறுகின்றது.
கொழுப்பு உணவு மூலங்கள்
புரதங்கள் போலவே கொழுப்புகளிலும் "அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள்" சில உள்ளன. இவற்றை மனித உடலால் உருவாக்க முடியாது. நாம் உணவின் மூலமே அவற்றைப் பெற இயலும்.
Important!
மனித உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான கொழுப்பு அமிலம் "ஒமேகா கொழுப்பு அமிலம்" ஆகும்.
கொழுப்பு வகைகள்:
நல்ல கொழுப்புகள்:
நல்ல கொழுப்பு உணவு மூலங்களில் நிறைவுறாக் கொழுப்பு அதிக அளவில் உள்ளது. அவற்றின் இரு வகைகள் பின்வருமாறு,
- ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு
- பல நிறைவுறாக் கொழுப்பு
Example:
கொட்டைகள் , கடலை வெண்ணைய், பாதாம் வெண்ணைய், தாவர எண்ணெய்
நிறைவுறாக் கொழுப்பின் உணவு மூலம்
கெட்ட கொழுப்புகள்:
கெட்ட கொழுப்பு உணவு மூலங்களில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் உள்ளது. இவை உடலுக்கு முற்றிலும் கெடுதல் விளைவிப்பவை ஆகும். எனவே, இந்த வகை கொழுப்பு உணவுகளை உண்ணாமல் தவிர்ப்பது மிகவும் நல்லது.
Example:
பேக்கேரி உணவுகள், கேக், பதப்படுத்தப்பட்ட உணவுகள்
நிறைவுற்ற கொழுப்பின் உணவு மூலங்கள்
Reference:
https://www.needpix.com/photo/664786/fat-foods-pastries-cheeses-chocolate-delicatessen-cold-meat-french-fries-cakes-donuts