PDF chapter test TRY NOW

அரசாங்கம் எப்போதும் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் தரமான தூய்மையான உணவு கிடைப்பதை வலியுறுத்துகிறது.
Important!
\(1954\)-ம் ஆண்டு "உணவு கலப்பட தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. மேலும், \(1955\)-ம் ஆண்டு "உணவு கலப்பட தடுப்பு விதிகள்" சட்டம் இயற்றப்பட்டது.
மக்களுக்கு தூய்மையான உணவு கிடைக்க, அதனை உறுதிபடுத்த, வியாபாரிகள் நுகர்வோரை ஏமாற்றாமல் இருக்க உணவு பாதுகாப்பு சட்டங்கள் இயற்றப்பட்டன. உணவு சட்டம் நுகர்வோருக்கு கிடைக்கும் உணவுகள் குறைந்தபட்ச தரம், சுகாதாரம் பெற்று இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.
\(2015\)-ம் ஆண்டு ஏப்ரல் \(7\)-ம் தேதி உலக சுகாதார தினத்தில் "பண்ணை முதல் உண்ணும் வரை பாதுகாத்திடுவீர் உணவை" என்னும் முழக்கம் எழுப்பப்பட்டது. உணவின் பாதுகாப்பை ஊக்குவிக்க மற்றும் உணவின் பாதுகாப்பை முன்னேற்ற இது போன்ற முழக்கம்  எழுப்பப்பட்டது.
இந்திய உணவு தரக்கட்டுபாடு நிறுவனங்கள்:
 
AGMARK, ISI, FPO, FCI என இது போல பல சுகாதாரத் துறைகள் இந்தியாவில் உள்ளன. இவற்றின் முக்கியப்பணி உணவிற்கான குறைந்தபட்ச தர விதிகளை நிர்ணயம் செய்து உணவின்  தரத்தை பாதுகாப்பதே ஆகும். 
 
225pxFoodCorporationofIndiasvg.png
  • விவசாய மற்றும் விவசாயிகளின் நலன் பாதுகாத்தல்
  • விவசாய பொருளுக்கு சரியான விலை நிர்ணயம் செய்தல்
  • நாடு முழுக்க உணவு தானியம் விநியோகித்தல்
  • தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்தல் 
  • போதுமான உணவு தானியங்கள் சேமித்தல்
  • நுகர்வோர் வாங்குவதற்கு உணவு தானியங்ளின் சரியான சந்தை விலையை ஒழுங்குபடுத்துதல்