PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoமுதலில் உயிரினங்கள் பொது பெயர் கொண்டு அழைக்கப்பட்டன. அதனால் குழப்பம் ஏற்படவே உயிரினங்களுக்கு இருசொல் பெயரிடும் முறையை கரோலஸ் லின்னேயஸ் அறிமுகப்படுத்தினார்.
கரோலஸ் லின்னேயஸ்
இரு சொல் பெயரிடும் முறையின் விதிகள் :
- பேரினம் (Genus) பெயர் முன்பாகவும், சிற்றினம் (species) பெயர் பின்பாகவும் இருக்க வேண்டும்.
- பேரினப் பெயரின் முதல் எழுத்து பெரியதாகவும் (capital letter) ஒரே வார்த்தையாகவும் இருக்க வேண்டும்.
- சிற்றினம் பெயர், சிறிய எழுத்துகளாகவும் (small letters), தனிவார்த்தையாகவோ (அ) கூட்டுவார்த்தையாகவோ இருக்கவேண்டும்.
- அச்சிடும் போது சாய்வாக அச்சிட (italics)வேண்டும், வலம் சார்ந்த சிறு எழுத்துக்களாக இருக்க வேண்டும்.
- ஒரு தொகுப்பிற்கு ஒரே ஒரு நிலையான பெயர் மட்டும் இருக்க வேண்டும்.
இருசொல் பெயரிடும் முறையில் பெயரிடப்பட்ட சில உயிரினங்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- அமீபா - அமீபாபுரோடியஸ்
- ஹைடிரா - ஹைடிரா வல்காரிஸ்
- உருளைப் புழு - அஸ்காரிஸ் லும்பிரிகாய்ட்ஸ்
- நாடாப்புழு - டீனியா சோலியம்
- மண்புழு - லாம்பிடோ மாரிட்டி / பெரியோனிக்ஸ் எக்ஸ்கவேட்டஸ்
- அட்டை - ஹிருடினேரியா கிரானுலோசா
- கரப்பான் பூச்சி - பெரிப்பிளானட்டா அமெரிக்கானா
- நத்தை - பைலா குளோபோசா
- நட்சத்திர மீன் - அஸ்டிரியஸ் ருபென்ஸ்
- தவளை - ரானா ஹெக்சாடாக்டைலா
- சுவர்பல்லி - பொடார்சிஸ் மியுராலிஸ்
- காகம் - கார்வஸ் ஸ்பெலன்டென்ஸ்
- மயில் - பாவோ கிரிஸ்டேடஸ்
- நாய் - கேனிஸ் பெமிலியாரிஸ்
- பூனை - ஃபெலிஸ் ஃபெலிஸ்
- புலி - பான்தரா டைகிரிஸ்
- மனிதன் - ஹோமோ செபியன்ஸ்
Reference:
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c2/Carolus_Linnaeus._Line_engraving_by_F._Zuliani_after_Tramont_Wellcome_V0003602.jpg/512px-Carolus_Linnaeus._Line_engraving_by_F._Zuliani_after_Tramont_Wellcome_V0003602.jpg