PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoவகைப்பாட்டின் அடிப்படை அலகுகளில் உடற்குழி மற்றும் முதுகு நாண் போன்றவற்றைக் குறித்து இந்த பகுதியில் காணலாம்.
உடற்குழி:
ஒரு உயிரினத்தின் உடலினுள்ளே திரவத்தினால் நிரப்பப்பட்ட குழி உடற்குழி எனப்படும். இது உடல் சுவற்றிலிருந்து உணவுப் பாதையைப் பிரிக்கிறது. உண்மையான உடற்குழி ஒரு உயிரினத்தின் உடலினுள்ளே நடு அடுக்கினுள் அமைந்துள்ளது. அதன் மறுபயர் சீலோம் (Coelom) என்பதாகும்.
உடற்குழி இயல்பின் அடிப்படையில் \(3\) வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
- உடற்குழி அற்றவை - எ.கா: நாடாப்புழு
- போலி உடற்குழி உள்ளவை - எ.கா: உருளைப்புழு
- உண்மையான உடற்குழி உள்ளவை – எ.கா: மண்புழு
உடற்குழி அடிப்படையில் உயிரினங்களின் வகைப்பாடு
முதுகு நாண்:
Important!
முதுகு நாண் என்பது ஒரு உயிரினம் கருவாக உருவாகும்போதே தோன்றக்கூடிய ஒரு பாகமாகும். உடலின் நடுமுதுகு பகுதியில் ஒரு கோல் வடிவ பாகமாக உருவாகும். முதன்மையான உயிரினங்களில் எந்த மாற்றமும் அடையாமல் நிலைத்திருக்கும் தன்மை கொண்டது. பிற விலங்குகளில் முதுகெலும்புத் தொடராக மாற்றம் அடைந்து விடும்.
முதுகு நாண் அமைப்பின் அடிப்படையில் விலங்குகள் இரண்டு குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை பின்னே வரிசைப்படுத்தி தரப்பட்டுள்ளன.
- முதுகு நாணற்றவை (In-Vertebrata) - இவை முதுகு நான் இல்லாத உயிரினங்களாகும்.
- முதுகு நாணுள்ளவை (Chordata) - முதல் முதுகு நாணுள்ளவை (Prochordata) மற்றும் முதுகெலும்பிகள் (Vertebrata), அதாவது முதுகில் நாண் உள்ள உயிரினங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.
முதுகு நாணின் அடிப்படையில் உயிரினங்களின் வகைப்பாடு
Reference:
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c5/Figure_27_02_05.jpg/1024px-Figure_27_02_05.jpg