PDF chapter test TRY NOW
முதுகு நாண் உள்ள உயிரினங்களில் இந்த பகுதியில் பாலூட்டிகளின் உடலமைப்பு, சிறப்பம்சங்கள் மற்றும் உடல் இயக்கம் குறித்து விரிவாக காணலாம்.
பாலூட்டிகள் தமது குட்டிகளுக்கு பால் கொடுக்கும் ஒரு வெப்ப இரத்த விலங்கினமாகும். இவை உயிர் வாழ்வதற்குத் தேவையான வெப்பம், இவற்றின் உடலின் இயக்கத்தில் இருந்தும் இவற்றின்
உடலில் உள்ள உரோமங்களில் இருந்தும் உருவாக்கப்படுகிறது. உடலானது தலை, கழுத்து, வயிறு மற்றும் வால் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வெளிக்காது மடல் இவற்றில் காணப்படுகிறது.
மேலும் பாலூட்டிகளின் தோலில் வியர்வைச் சுரபிகளும் எண்ணெய்ச் சுரபிகளும் உள்ளன. பெரும்பாலான பாலூட்டிகள் நான்கு கால்களைக் கொண்டவை. அவற்றின் தோலின் மீது முடிபாலூட்டிகளின் இதயம் நான்கு அறைகளுடையது. யைக் கொண்டிருக்கும். பெரும்பாலான பாலூட்டிகள், உயிருள்ள குட்டிகளை ஈன்று பேணுகின்றன. மிகச் சில பாலூட்டிகள் மட்டுமே முட்டையிட்டு குஞ்சு பொறிக்கின்றன.
பாலூட்டிகள்
முட்டையிடும் பாலூட்டி பிளாட்டிபஸ் மட்டுமேயாகும். மற்ற அனைத்து பாலூட்டிகளும் குட்டிகளை ஈனுகின்றன. பெண் பாலூட்டி உயிரினங்கள் பால் சுரப்பிகளைக் கொண்டுள்ளன. பாலூட்டிகளின் மற்றொரு சிறப்பம்சம் தாய்–சேய் இணைப்புத்திசு ஆகும்.
Example:
முயல், மனிதன், எலி
ராட்சத நீலத் திமிங்கிலம் உலகின் மிகப்பெரிய பாலூட்டியாகும். இது 120 டன் எடையுடையது. மேலும் இதன் நீளம் 35 மீட்டர் ஆகும். முதுகெலும்புள்ள உயிரினங்களில் இதுவே பெரியது.
Reference:
https://upload.wikimedia.org/wikipedia/commons/c/c3/Mammal_Diversity.png