PDF chapter test TRY NOW
வகுப்பு - ஊர்வன:
புவியில் வாழ்வதற்கான முழுமையான உடல் அமைப்பு பெற்ற முதல் முதுகெலும்பு உள்ள உயிரினங்கள் ஊர்வனவாகும். இவை குளிர் இரத்தம் கொண்டவை. மேலும், இவை முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பவை. தங்கள் வயிற்றைப் பயன்படுத்தி தரையில் ஊர்ந்து செல்பவை.
தோலின் மேற்புறத்தில் சொரசொரப்பான முட்கள் போன்ற செதில்கள் உள்ளன. பெரும்பாலான ஊர்வன கால்களைக் கொண்டுள்ளன. ஆனால் பாம்புகள் கால்கள் அற்றவை.
ர்வன உயிரினங்களின் சுவாசம் நுரையீரல் மூலம் நடைபெறுகிறது. இவற்றின் இதயத்தில் மூன்று அறைகள் காணப்படும். முதலைகளின் இதயத்தில் மட்டும் நான்கு அறைகள் காணப்படுகின்றன.
Example:
பல்லி, பாம்பு, ஆமை, ஓணான்

ஊர்வன
வகுப்பு-பறவைகள்:
முதுகெலும்பிகளில் புவியில் முதலில் தோன்றிய வெப்ப ரத்த விலங்கு பறவைகளாகும். இவற்றின் உடலமைப்பு தலை, கழுத்து, உடல் மற்றும் வால் என நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. உடல் முழுவதும் இறகுகளால் மூடப்பட்டுள்ளது. பறவைகளின் முன்னங்கால்கள் இறக்கைகளாக மாற்றம் அடைந்துள்ளன. இவற்றின் பின்னங்கால்கள் நடக்க, ஓட, நீந்த ஏற்ற தகவமைப்பைப் பெற்றுள்ளன.
பறவைகளின் சுவாசம் காற்றறைகளைக் கொண்ட நுரையீரல் மூலம் நடைபெறுகிறது. இவற்றின் எலும்புகள் மிகவும் மென்மையானவை. அதன் காரணமானது எலும்புகளில் காற்றறைகள் (pneumatic bones) உள்ளன. முட்டைகள் கடினமான கால்சியம் மிகுந்த ஓடுடையவை.
Example:
காகம், கழுகு, புறா, நெருப்புக்கோழி, கிளி

பறவைகள்
Reference:
https://www.flickr.com/photos/tim_ellis/2452232957
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e5/European_reptiles_collage.jpg/1024px-European_reptiles_collage.jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/d/d2/Bird_Diversity_2011.png
https://upload.wikimedia.org/wikipedia/commons/d/d2/Bird_Diversity_2011.png