PDF chapter test TRY NOW
முதுகெலும்பிகள் (Vertebrata):
முதுகெலும்பு அல்லது தண்டுவடத்தினைக் கொண்டிருக்கும் விலங்குகளைக் குறிக்கும். மீன்கள், நிலநீர் வாழ்வன அல்லது இருவாழ்விகள், ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள் ஆகியன முதுகெலும்பிகள் வகையில் அடங்கும்.
முதுகெலும்புடையவை ஆறு வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
வட்டவாயுடையன:
வட்டவாயுடைய உயிரினங்களாகிய தாடையற்ற முதுகெலும்பிகளாகும். இதன் அர்த்தம் யாதெனில் வாய்த்துவாரம் தாடையினால்சூழப்படாத நிலையாகும். இவ்வுயிரினங்களின் உடல் நீளமானது.
இவற்றின் தோல் வழவழப்பாகவும், செதில்கள் இல்லாமலும் காணப்படும். பிற மீன்களின் மேல் புற ஒட்டுண்ணிகளாக, மீன்களின் மேல் வாழ்க்கை நடத்துகின்றன.
Example:
லாம்ப்ரே, ஹேக் மீன்.
(i) வகுப்பு - மீன்கள்:
குளிர் இரத்தப் பிராணிகளான (Poikilothermic) மீன்கள் நீர் வாழ் முதுகெலும்பிகளாகும். மீன்கள் தலை, உடல், வால் என மூன்று பகுதிகளைக் கொண்டது. தாடைகளைப் பெற்ற இதன் உடல் படகு போன்று அமைந்துள்ளது.
இணைத் துடுப்புகளும் நடுமையத் துடுப்புகளும் மீன்கள் நீந்திச் செல்ல உதவுகின்றன. மீன்களின் உடல் செதில்களைக் கொண்டது. செவுள்கள் வழியாக சுவாசம் நிகழ்கிறது. இதயம் ஆரிக்கிள், வென்டிரிக்கிள் என இரு அறைகளைக் கொண்டது.
முக்கியமான மீன் வகைகள்:
குறுத்தெலும்பு மீன்கள்: மீன்களின் எலும்புச் சட்டகம் குறுத்தெலும்பினால் ஆனது.
Example:
ஸ்கேட்ஸ், சுறா
எலும்பு மீன்கள்: மீன்களின் உடல் எலும்புச் சட்டகத்தைக் கொண்டவை.
Example:
கெண்டை, மடவை
மீன்கள்
பிலிப்பைன் கோபி அல்லது குட்டை பிக்மி கோபி (dwarf pygmy goby) மீனினம்தான் உலகிலேயே மிகச் சிறிய முதுகெலும்பியாகும். தெற்கு ஆசியாவிலுள்ளசதுப்பு நிலங்களிலும்மற்றும் உப்பு நீர் நிலைகளிலும் இவை வாழ்கின்றன. இவற்றின் நீளம் வெறும் 10 மி.மீ மட்டுமேயாகும்.
(ii) வகுப்பு-இரு வாழ்விகள்:
இரு வாழ்விகள் முதுகெலும்புடைய நான்கு கால்கள் அமைந்த விலங்குகளாகும். இருவாழ்விகள் தம் வாழ்க்கைச் சுழற்சியை நீரில் வாழும் உயிரிகளாகத் தொடங்குகின்றன. இவை தலை, உடல் என்று பிரிக்கப்பட்டுள்ளது. செதில்கள் இல்லாத தோல் உடைய உயிரினங்களான இவை ஈரப்பதமான சுரப்பிகளைக் கொண்டுள்ளது.
இதயம் இரண்டு ஆரிக்கிள்கள், ஒரு வென்டிரிக்கிள் என மூன்று அறைகளைக் கொண்டது. செவுள்கள், நுரைஈரல், தோல் மற்றும் தொண்டை மூலம் சுவாசம் நடைபெறுகின்றது. இரு வாழ்விகள் தங்கள் முட்டைகளை நீரிலே இடுகின்றன. முதிர் உயிரியாக மாறுவது முட்டையிலிருந்து வரும் தலைப்பிரட்டையாகும்.
Example:
தவளை, தேரை
இருவாழ்விகள்
ராட்சத சாலமான்டர் ஆன்டிரியஸ் டாவிடியன்ஸ் (Andrias davidians) சீனாவில் வாழும் உலகின் மிகப்பெரிய இரு வாழ்வியாகும். இதன் எடை கிட்டத்தட்ட 65 கிலோ ஆகும். இந்த உயிரினத்தின் நீளம் 5 அடி மற்றும் 11 அங்குலமாகும். மத்திய சீனா மற்றும் தெற்கு சீனாவில் இவ்வுயிரினம் காணப்படுகின்றது.
Reference:
https://www.flickr.com/photos/tim_ellis/2452232957