PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஉயிரினங்களின் வகைபாடு குறித்து முந்தைய பகுதியில் விரிவாக படித்தோம். இப்பகுதியில் நாம் வகைபாட்டு குழுமங்கள் குறித்து காணலாம்.
வகைபாட்டு குழுமங்கள்:
வகைபாட்டியலின் அடிப்படை அலகு சிற்றினம் ஆகும். சிற்றினம், அதற்கும் மேலாக உள்ள குழுமத்தின் கீழ் அடங்கும். இவ்வகைபாட்டுப்படி அமைப்பில் மேலே செல்லச்செல்ல அவற்றுக்குள் அடங்கிய குழுமங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. அனைத்து விதமான வகைபாட்டிலும் மொத்தம் ஏழு குழுமங்கள் காணப்படுகின்றன.
வகைபாட்டின் குழுமங்கள்
|
1. சிற்றினம்:
சிற்றின வகைப்பாட்டின் கீழ் உள்ள விலங்குகள் மிகவும் தனித்துவமானவை ஆகும். இது உயிரின வகைப்பாட்டியலில் கடைசி வகையாகும்.
Example:
மிகப் பெரிய இந்தியக் கிளி (Psittacula eupatria) மற்றும் பச்சைக் கிளி (Psittacula krameri) ஆகியவை இரு வேறு இனங்களை (யூபாட்ரா மற்றும் க்ராமேரி) சேர்ந்த பறவைகளாகும். ஆதலால், இவ்விரு இனப் பறவைகள் இணைந்து இனப்பெருக்கம் செய்ய முடியாது. எனவே, அவை தனித்துவமானவை.
2. பேரினம்:
சிற்றினத்திற்கு அடுத்த அலகாக அமைந்த குழுமம் பேரினம் ஆகும். இது நெருங்கிய தொடர்புடைய சிற்றினங்களை உள்ளடக்கிய ஒரு தொகுப்பு ஆகும்.
Example:
இந்திய நரி (Canis pallipes) மற்றும் இந்திய குள்ளநரி (கேனிஸ் ஆரியஸ்) ஆகியவை கேனிஸ் பேரினத்தின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன.
3. குடும்பம்:
ஒத்த பேரினம் அல்லது ஜெனீரா உறுப்பினர்களை ஒன்றாக வகைப்படுத்தி குடும்பம் என்னும் குழுமம் பிரிக்கப்படும்.
Example:
உதாரணமாக, சிறுத்தை, புலி மற்றும் பூனை ஆகிய மூன்றும் பொதுவான பண்புகளைப் பெற்றுள்ளன. ஆகையால், இவை ஒரு பெரும் குடும்பமான ஃபெலிடெவில் (Felidae) உள்ளடக்கப்பட்டுள்ளன.
4. வரிசை:
இந்த பகுப்பில் பொதுவான பண்புகளால் ஒன்றோடொன்று தொடர்புடைய பல வகுப்புகள் அனைத்தும் வரிசை குழுமத்தில் வைக்கப்பட்டுள்ளன.
Example:
குரங்குகளின் வரிசையில், வாலற்ற பெருங்குரங்குகள், மனிதக் குரங்குகள், குரங்குகள் மற்றும் மனிதர்கள் ஆகிய இனங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஏனெனில் இந்த விலங்குகள் அனைத்தும் ஒரே மாதிரியான அம்சங்களைக் கொண்ட பிரைமேட்டுகள் ஆகும்.
5. வகுப்பு:
ஒரே வகையான வரிசைகள் ஒன்று சேர்த்து வகுப்புக் குழுமம் தொகுக்கப்பட்டுள்ளது.
Example:
பல்வேறு வகையான வெளவால்கள், எலிகள், குரங்குகள் ஒரே வகுப்பினுள் தொகுக்கப்பட்டுள்ளன.
6. தொகுதி (அ) பிரிவு:
ஒன்றோடொன்று தொடர்புடைய வகுப்புகள் ஒன்று சேர்ந்து ஒரு தொகுதியை உருவாக்குகின்றன.
Example:
விலங்குகளில், ஊர்வன, மீன்கள் மற்றும் பாலூட்டிகள் என்று பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
7. உலகம் (அ) பேரரசு:
இது மேம்பட்ட வகையைச் சேர்ந்த குழுமமாகும். மேலும் இது மற்ற பிரிவுகளை விட மிகப்பெரிய பிரிவாகும். மேலும், இதில் குழுவாக உள்ள விலங்குகளுக்கு பொதுவான பண்புகள் உள்ளன.
Example:
நுண்ணுயிரிகள், தாவரங்கள், விலங்குகள்
Reference:
https://commons.wikimedia.org/wiki/File:Biological_classification_L_Pengo_vflip.sr.jpg#/media/File:Biological_classification_L_Pengo_vflip.svg