PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகணம்:
நன்கு வரையறுக்கப்ட்டப் பொருள்களின் தொகுப்பு கணம் எனப்படும்.
கணமானதுஆங்கில தலைப்பு எழுத்துக்களால் குறிப்பிடப்படுகிறது, ஆனால் அதன் உறுப்புகளோஆங்கில சிறிய எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன மற்றும் கணத்தின் உறுப்புக்களை "\(\{ \}\)".என்ற கண அடைப்பு அல்லது வில் அடைப்பிற்குள்.
Example:
\(A\) என்பது \(10\) இற்கு குறைவான இரட்டை எண்.
\(A =\) \(\{2, 4, 6, 8\}\)
பின்வரும் இரண்டு வடிவங்களில் கணங்களின் கருத்தை விரிவுபடுத்துவோம்.
- உறவுகள்
- சார்புகள்
ஏறக்குறைய ஒவ்வொரு நாட்களும் சூழ்நிலைகளை ‘சார்புகள்’ அல்லது ‘உறவுகள்’மூலம் கணித ரீதியாக குறிப்பிடப்படுகின்றன.
உறவுகள் மற்றும் சார்புகளின் சில நிச வாழ்க்கை உதாரணங்கள்
- ஒரு குறிப்பிட்ட வயதில் ஒரு நபரின் உயரத்தை ஒரு சார்புகளாக வெளிப்படுத்தலாம்.
- வடிவியல் உருவங்களின் பரப்பளவு மற்றும் அளவை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாறிகள் கொண்ட சார்புகளாக வெளிப்படுத்தலாம்.
- ஒரு குறிப்பிட்ட பருவத்தில் வெப்பநிலை ஒரு உறவைக் குறிக்கிறது..
கணங்களை சார்புகள் மற்றும் உறவுகளுக்கு நீட்டிக்க, இரண்டு காலியாக இல்லாத கணங்களின் கார்ட்டீசியன் பெருக்கலை நாம் தெரிந்து கொள்ள வேண்டும், இது வரவிருக்கும் கோட்பாடுகளில் விவாதிப்போம்.
Reference:
https://pixabay.com/photos/seasons-4-seasons-four-seasons-5880235/