PDF chapter test TRY NOW

அனைத்து கணங்களும் உறவைப் பெற்றிருக்க வேண்டுமா?

இல்லை, அனைத்து கணங்களும் உறவைப் பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
 
இன்மை உறவு:
ஓர் உறவில் உறுப்புகள் இல்லை என்றால் அது இன்மை உறவு எனப்படும்.
Example:
\(A\) என்பது இந்தியாவின் மாநிலங்களின் கணம் என்க மற்றும் \(B\) என்பது இந்தியாவின் மாநிலங்களின் தலைநகரங்களின் கணம் என்க.
 
அதாவது, \(A = \{\)கேரளா, குஜராத், பஞ்சாப்\(\}\) மற்றும் \(B = \{\)சென்னை, மும்பை, கொல்கத்தா\(\}\).
 
இங்கு கொடுக்கப்பட்ட மாநிலங்களுக்கும் \(A\) மற்றும் தலைநகரங்களுக்கும் \(B\) எந்த உறவும் \(R\) இல்லை என்பதை அறியலாம்.
 
எனவே, \(R\) இல் எந்த உறுப்புகளும் இல்லை.
 
எனவே, \(R\) இன்மை உறவு ஆகும்.
இன்மை உறவை  அல்லது \(\{\}\) எனக் குறிப்பிடலாம்.
  
உறவுகளின் எண்ணிக்கை:
 
\(A\) மற்றும் \(B\) என்பன இரண்டு கணங்கள் எனில் இந்த இரண்டு கணங்களுக்கு இடையேயுள்ள மொத்த உறவுகளின் எண்ணிக்கையே கீழ்கண்டவாறு காணலாம்.
\(A\) கணத்தின் உறுப்புகளின் எண்ணிக்கை \(= m\),\(B\) கணத்தின் உறுப்புகளின் எண்ணிக்கை \(= n\) எனில் \(A\) லிருந்து \(B\) க்கு மொத்த உறவுகளின் எண்ணிக்கை \(2^m\)\(^n\) ஆகும்.
Example:
\(A = \{(4, 8, 13\}\) மற்றும் \(B = \{(15, 11\}\) என்பன இரண்டு கணங்கள் என்க.
 
இங்கு, \(n (A) = 3\) மற்றும் \(n (B) = 2\).
 
எனவே, \(A\) லிருந்து \(B\) க்கு உள்ள மொத்த உறவுகளின் எண்ணிக்கை  23×2=26.