PDF chapter test TRY NOW

சார்பகங்களின் மதிப்பகம்:
 
சார்பகங்களின் மதிப்பகம் காண கீழ்க்கண்டவற்றை நினைவில் கொள்ள வேண்டும்.
  1. சார்பகத்தின் பகுதி பூச்சியமாக இருக்க கூடாது.
  2. வர்க்கமூலத்திற்கு உள்ளே உள்ள எண் மிகை எண்ணாக இருக்க வேண்டும்.
Example:
கொடுக்கப்பட்ட சார்பகங்களின் மதிப்பகம் காண்க:
 
1. \(f(x) =\) \(1-x\)
 
இங்கு, \(x\) இன் அனைத்து மெய் மதிப்புகளுக்கும் \(f\) ஆனது பொருந்தும்.
 
எனவே, \(f\) இன் மதிப்பகம் \(\mathbb{R}\).
 
 
2. \(f(x) =\) \(\frac{1}{x}\).
 
இங்கு, சார்பானது பின்ன வடிவில் உள்ளது.
 
எனவே, சார்பகத்தின் பகுதி பூச்சியம் அல்ல.
 
அதாவது \(x\) இன் மதிப்பு \(0\) அல்ல.
 
எனவே, \(0\) தவிர அனைத்து மெய் மதிப்புகளுக்கும் இந்த சார்பு பொருந்தும்.
 
எனவே, \(f\) இன் மதிப்பகம் \(\mathbb{R} - \{0\}\).
 
 
3. \(f(x) =\) \(\frac{1}{x+10}\).
 
இங்கு, சார்பானது பின்ன வடிவில் உள்ளது.
 
எனவே, சார்பகத்தின் பகுதி பூச்சியம் அல்ல.
 
அதாவது, \(x+10\) என்பது \(0\) அல்ல.
 
\(x+10 = 0\) எனில் \(x = -10\).
 
எனவே \(x\) இன் மதிப்பு \(-10\) அல்ல.
 
எனவே, கொடுக்கப்பட்ட சார்பகத்தின் மதிப்பகம் \(\mathbb{R} - \{-10\}\).