
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoசார்புகளின் வகைகள்:
1. ஒன்றுக்கு – ஒன்றான சார்பு
2. பலவற்றிற்கு – ஒன்று சார்பு
3. மேல் சார்பு
4. உள்நோக்கிய சார்பு
என்று சார்புகளை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.
ஒன்றுக்கு – ஒன்றான சார்பு
f : A \rightarrow B என்பது ஒரு சார்பு என்க. A -யின் வெவ்வேறான உறுப்புகளை B -ல் உள்ள வெவ்வேறு
உறுப்புகளுடன் f ஆனது தொடர்புபடுத்துமானால், f என்பது ஒன்றுக்கு ஒன்றான சார்பு ஆகும்.

f(a_1) = f(a_2) என்றவாறு அமைந்த ஒவ்வொரு a_1,a_2 \in A -க்கும் a_1=a_2 எனக் கிடைத்தால்,
f என்பது ஒன்றுக்கொன்றான சார்பாகும்.
ஒன்றுக்கு ஒன்றான சார்பு என்பது ஒருபுறச் சார்பு எனவும் அழைக்கப்படும்.
பலவற்றிற்கு ஒன்றான சார்பு
சார்பு f : A \rightarrow B -ஐ பலவற்றிற்கு ஒன்றான சார்பு எனில், அச்சார்பில் A-யின் ஒன்றிற்கு மேற்பட்ட உறுப்புகளுக்கு, B-ல் ஒரே நிழல் உரு இருக்கும்.

மேல் சார்பு
f : A \rightarrow B என்ற ஒரு சார்பு, மேல் சார்பு எனில், f -யின் வீச்சகமானது, f-யின்
துணை மதிப்பகத்திற்குச் சமமாக இருக்கும்.
துணை மதிப்பகம் B-ல் உள்ள ஒவ்வோர் உறுப்பிற்கும் மதிப்பகம் A-ல் முன் உரு இருக்கும்
எனவும் கூறலாம்.

உட்சார்பு
சார்பு f : A \rightarrow B ஆனது உட்சார்பு எனில், B-ல் குறைந்தபட்சம் ஓர் உறுப்பிற்காவது, A-ல்
முன் உரு இருக்காது.
