PDF chapter test TRY NOW
இதற்கு முன்னர் நாம் குத்துக் கோட்டுச் சோதனையைப் பார்த்தோம்.
தற்போது
கிடைமட்டக்கோட்டுச் சோதனையைப் பார்க்கலாம்.
"வளைவரை ஒன்றுக்கொன்றான சார்பைக் குறித்தால், வரையப்படும் கிடைமட்டக்கோடு வளைவரையை அதிகபட்சமாக ஒரு புள்ளியில் மட்டுமே வெட்டும்”.
Example:
கீழ்க்கண்ட வரைபடத்தை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்வோம்.
இங்கு, நீல நிற வளைவரை சார்பைக்குறிக்கிறது. சிவப்பு நிற கோடு கிடைமட்ட கோடு ஆகும்.
கிடைமட்ட கோடு வரைவளையை ஒரே ஒரு புள்ளியில் வெட்டுவதைக் காணலாம்.
எனவே, கொடுக்கப்பட்ட வளைவரை ஒன்றுக்கொன்று சார்பாகும்.