PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஒரு சார்பை:
 
1. வரிசைச் சோடிகளின் கணம்
 
2. அட்டவணை முறை
 
3. அம்புகுறி படம்
 
4. வரைபட முறை ஆகியவற்றின் மூலமாகக் குறிப்பிடலாம்
1. வரிசைச் சோடிகளின் கணம்
f : A \rightarrow B என்ற சார்பை f = \{(x, y) | y = f(x), x \in A\} என்றவாறு அமையும் வரிசைச் சோடிகளின் கணமாகக் குறிக்கலாம்.
Example:
ஒரு எண்ணின் வர்க்கம்  என்ற சார்பை, கீழ்க்கண்டவாறு வரிசைச் சோடிகளாக எழுதலாம்.
 
\{(1, 1), (2, 4), (3, 9), (4, 16),...\}
2. அட்டவணை முறை
x-ன் மதிப்புகள் மற்றும் f -ஆல் பெறப்படும் நிழல் உருக்கள் ஆகியவற்றைக்கொண்டு ஒரு அட்டவணையை அமைக்கலாம்.
Example:
ஒரு எண்ணின் வர்க்கம்  என்ற சார்பை கீழ்க்கண்டவாறு அட்டவணையாக எழுதலாம்.
 
எண்
வர்க்கம்
1
1
2
4
3
9
4
16
3.அம்புக்குறி படம் 
f-ன் மதிப்பகத்தையும் அதன் நிழல் உருக்களையும் அம்புகுறி மூலம் தொடர்புபடுத்திக் காட்டலாம்.
Example:
ஒரு எண்ணின் வர்க்கம்  என்ற சார்பை கீழ்க்கண்டவாறு அம்புகுறி படமாக வரையலாம்.
 
YCIND20220817_4277_Representation of functions_05.png
4. வரைபடம்
f = \{(x, y) | y = f(x), x \in A\}-ல் உள்ள அனைத்து வரிசைச் சோடிகளை XY தளத்தில் புள்ளிகளாகக் குறிக்கலாம். அனைத்துப் புள்ளிகளையும் இணைக்கும் படம் f -ன் வரைபடமாகும்.
Example:
ஒரு எண்ணின் வர்க்கம்  என்ற சார்பை கீழ்க்கண்டவாறு வரைபடமாக வரையலாம்.
 
2.svg
 
ஒவ்வொரு சார்பையும், ஒரு வளைவரையாக வரைபடத்தில் குறிப்பிடலாம்.