PDF chapter test TRY NOW
இருபடிச் சார்பு வரைபடங்கள் பற்றி காணலாம்.
இருபடிச் சார்பு
ஒரு சார்பு f: \mathbb{R} \rightarrow \mathbb{R}, f(x) = ax^2 + bx + c, a \neq 0 என வரையறுக்கப்பட்டால் அது இருபடிச் சார்பு ஆகும்.
சில குறிப்பிட்ட இருபடிச் சார்புகள் மற்றும் அதன் வரைபடங்களைப் பற்றி பார்க்கலாம்.
வகை 1:
ஒரு இருபடிச் சார்பு f: \mathbb{R} \rightarrow \mathbb{R}, f(x) = x^2 என வரையறுக்கப்படுகிறது. இதன் மதிப்பகம் x \in \mathbb{R} மற்றும் வீச்சகம் f(x) \in [0, \infty).
வரைபடம்:
![]() |
வகை II:
ஒரு இருபடிச் சார்பு f: \mathbb{R} \rightarrow \mathbb{R} f(x) = - x^2 என வரையறுக்கப்படுகிறது. இதன் மதிப்பகம் x \in \mathbb{R} மற்றும் வீச்சகம் f(x) \in (- \infty, 0].
வரைப்படம்:
![]() |
Important!
- இருபடிச் சார்பு என்பது ஒன்றுக்கு ஒன்று சார்பு அல்ல.
- ஈர்ப்பு விசையால் நகரும் பொருளின் சார்பு இருபடிச் சார்பாகும்.
