PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நேரிய சார்புகளுக்கான வரைபடங்களை அடையாளம் காணுதல்.
நேரிய சார்பு
\(f: \mathbb{R} \rightarrow \mathbb{R}\) என்ற சார்பு \(f(x) = mx + c\), \(m \neq 0\) என வரையறுக்கப்பட்டால் அது நேரிய சார்பு ஆகும்.
நேரிய சார்பின் வரைபடம் நேர்க்கோடு ஆகும்.
 
ஒரு சில குறிப்பிட்ட நேரிய சார்புகள் மற்றும் அதன் வரைபடங்கள் பற்றி காணலாம்.
 
  • சமனிச் சார்பு
  • கூட்டல் தலைகீழிச் சார்பு
 
சமனிச் சார்பு
\(f: \mathbb{R} \rightarrow \mathbb{R}\) என்ற சார்பு \(f(x) = x\) என வரையறுக்கப்பட்டால் அது சமனிச் சார்பு ஆகும்.
சமனிச் சார்பின் வரைபடம்:
 
Identity function.png
 
கூட்டல் தலைகீழிச் சார்பு
\(f: \mathbb{R} \rightarrow \mathbb{R}\) என்ற சார்பு \(f(x) = - x\) என வரையறுக்கப்பட்டால் அது கூட்டல் தலைகீழிச் சார்பு ஆகும்.
கூட்டல் தலைகீழிச் சார்பின் வரைபடம்:
 
Add iverse dunc.png
 
Important!
நேரிய சார்பு எப்பொழுதும் ஒன்றுக்கு ஒன்று சார்பாகும்.