PDF chapter test TRY NOW

1. \(ab\) ஐ \(p\) என்ற பகா எண் வகுக்கும் எனில், \(p\) ஆனது \(a\) ஐ வகுக்கும் அல்லது \(p\) ஆனது \(b\) ஐ வகுக்கும். அதாவது \(p\) ஆனது \(a,b\) -ல் ஏதேனும் ஒன்றை வகுக்கும்.
Example:
\(3\) என்ற பகா எண் \(5 \times 6\) ஐ வகுக்கும்.
 
5×63
 
இங்கு, \(3\) ஆனது \(5\) ஐ வகுக்காது, அனால் \(6\) ஐ வகுக்கும்.
 
அதாவது, \(p\) ஆனது குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு எண்ணை வகுக்கும்.
 
2. \(ab\) ஐ \(n\) என்ற பகு எண் வகுக்கும் எனில், \(n\) ஆனது \(a\) -யையும் வகுக்க வேண்டியதில்லை \(b\) ஐயும் வகுக்க வேண்டியதில்லை.
Example:
\(4\) என்ற எண் \(2 \times 6\) ஐ வகுக்கும்.
 
2×64
 
இங்கு, \(4\) ஆனது \(2\) ஐ வகுக்காது மற்றும் \(6\) ஐயும் வகுக்காது. ஆனால், \(2 \times 6 = 12\) ஐ வகுக்கும்.
Important!
\(xyxyxy\) (இங்கு, \(1 \le x \le 9, 1 \le y \le 9\)) என்ற ஆறிலக்க எண் எப்பொழுதும் \(10101\) ஆல் வகுப்படும்.
 
விளக்கம்:
 
\(xyxyxy = (xy \times 10000) + (xy \times 100) + xy\)
 
\(xyxyxy = xy (10000 + 100 + 1)\)
 
\(xyxyxy = xy (10101)\)
 
xyxyxy10101=xy
 
எனவே, \(xyxyxy\) (இங்கு, \(1 \le x \le 9, 1 \le y \le 9\)) என்ற ஆறிலக்க எண் எப்பொழுதும் \(10101\) ஆல் வகுப்படும்.