PDF chapter test TRY NOW
எண்கள் மீதான அடிப்படைச் செயல்பாடுகளான கூட்டல், கழித்தல் மற்றும் பெருக்கல் போன்று
மட்டு எண்கணிதத்திலும் அதே செயல்பாடுகளை நாம் செய்யலாம். இச்செயல்பாடுகளைச்
செய்வதற்குத் தேவையான கருத்துகளைப் பின்வரும் தேற்றம் மூலம் காணலாம்.
தேற்றம் I: \(a\), \(b\), \(c\) மற்றும் \(d\) முழுக்கள் மற்றும் \(m\) என்பது ஏதேனும் ஒரு மிகை முழு, \(a \equiv b (\textit{மட்டு} \ m)\) மற்றும் \(c \equiv d (\textit{மட்டு} \ m)\) எனில்
(i) \((a + c) \equiv (b + d) (\textit{மட்டு} \ m)\)
(ii) \((a - c) \equiv (b - d) (\textit{மட்டு} \ m)\)
(iii) \((a \times c) \equiv (b \times d) (\textit{மட்டு} \ m)\)
தேற்றம் II: \(a \equiv b (\textit{மட்டு} \ m)\) எனில்
(i) \(ac \equiv bc (\textit{மட்டு} \ m)\)
(ii) \(a \pm c \equiv b \pm c (\textit{மட்டு} \ m)\) இங்கு, \(c\) என்பது ஏதேனும் ஒரு மிகை முழு.
Example:
\(13 \equiv 1 (\textit{மட்டு} \ 6)\) மற்றும் \(40 \equiv 4 (\textit{மட்டு} \ 6)\) எனில் மட்டுகளின் கூட்டல், கழித்தல் மற்றும் பெருக்கல் காண்க.
தீர்வு:
(i) கூட்டல்:
\(13 + 40 \equiv 1 + 4 (\textit{மட்டு} \ 6)\)
\(53 \equiv 5 (\textit{மட்டு} \ 6)\)
(ii) கழித்தல்:
\(13 - 40 \equiv 1 - 4 (\textit{மட்டு} \ 6)\)
\(-27 \equiv -3 (\textit{மட்டு} \ 6)\)
(iii) பெருக்கல்:
\(13 \times 40 \equiv 1 \times 4 (\textit{மட்டு} \ 6)\)
\(520 \equiv 4 (\textit{மட்டு} \ 6)\)