PDF chapter test TRY NOW

மூன்று மாறிகளில் நேரியல் சமன்பாட்டின் அமைப்பிற்கான தீர்வை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதைக் கற்றுக்கொள்வோம்.
Example:
பின்வரும் மூன்று மாறிகளில் அமைந்த நேரிய சமன்பாட்டு தொகுப்பினைத் தீர்க்க 6x + 4y - 2z = 12, -2x + 2y + z = 3, 2x + 2y + 2z = 8.
 
தீர்வு:
 
சமன்பாடுகளுக்கு பெயரிடுவோம்.
 
6x + 4y - 2z = 12 ---- (1)
 
-2x + 2y + z = 3 ---- (2)
 
2x + 2y + 2z = 8 ---- (3)
 
படி 1: சமன்பாடு (2) மற்றும் (3)ஐ தீர்க்கவும்.
 
-2x + 2y + z = 3
 
 2x + 2y + 2z = 8
__________________________
            4y + 3z = 11 ---- (4)
 
படி 2: இதேபோல், x என்ற மாறியை சமன்பாடு 1 மற்றும் 2 யிலிருந்து நீக்குவோம்.
 
6x + 4y -2z = 12
 
-6x + 6y + 3z = 9
__________________________
            10y + z = 21 ---- (5)
 
படி 3: சமன்பாடு (4)- 3 x  (5).
 
    4y + 3z = 11
 
  30y + 3z = 63
(-)    (-)      (-)
___________________________
- 26y = - 52
 
y = 2
 
y இன் மதிப்பை சமன்பாடு (5)இல் பிரதியிட, கிடைப்பது:
 
20 + z = 21
 
z = 1
 
படி 4: y மற்றும் z இன் மதிப்பை சமன்பாடு (1)இல் பிரதியிட, கிடைப்பது:
 
6x + 4(2) - 2(1) = 12
 
6x + 8 - 2 = 12
 
6x + 6 = 12
 
6x = 6
 
x = 1
 
எனவே, தீர்வு x = 1, y = 2 மற்றும் z = 1.