
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demox, y மற்றும் z என்ற மூன்று மாறிகளில் அமைந்த ஒருபடிச் சமன்பாடு, மூன்று மாறிகளில் அமைந்த நேரிய சமன்பாடு எனப்படும்.
மூன்று மாறிகளில் அமைந்த நேரிய சமன்பாட்டின் பொது வடிவமானது,
ax + by + cz + d = 0
இங்கு, a, b, c மற்றும் d ஆகியவை பூஜ்ஜியமற்ற மெய் எண்கள், மற்றும் x மற்றும் y ஆகியவை மாறிகள் .
வரைபட முறை:
இரு மாறிகளில் அமைந்த நேரிய சமன்பாடு ax + by + c = 0 ஆனது நேர்க்கோட்டை குறிக்கும்.

மூன்று மாறிகளில் அமைந்த நேரிய சமன்பாடு ax + by + cz + d = 0 ஆனது தளத்தைக் குறிக்கும்.

நேரிய சமன்பாடு தொகுப்பிற்க்கான தீர்வுகள்
மூன்று மாறிகளில் நேரியல் சமன்பாட்டு தொகுப்பின் பொதுவான வடிவம்:
a_1x + b_1y + c_1z + d_1 = 0
a_2x + b_2y + c_2z + d_2 = 0
a_3x + b_3y + c_3z + d_3 = 0
ஒரேயொரு தீர்வு: மூன்று சமன்பாடுகள் ஒரு தளத்தில் ஒரு பொதுவான புள்ளியில் சந்திக்குமாயின், அப்புள்ளியே அச்சமன்பாட்டுத் தொகுப்பிற்க்கு ஒரே ஒரு தீர்வு மட்டுமே இருக்கும்.

எண்ணிக்கையற்ற தீர்வுகள்: மூன்று சமன்பாடுகள் ஒரே தளத்தின் மேல் சந்திக்குமாயின், அச்சமன்பாட்டுத் தொகுப்பிற்க்கு எண்ணிக்கையற்ற தீர்வுகள் இருக்கும்.

தீர்வு இல்லை: மூன்று சமன்பாடுகளுக்கும் எந்த ஒரு பொதுவான புள்ளியும் இல்லையென்றால், அச்சமன்பாட்டிற்க்கு தீர்வு இருக்காது.

மூன்று மாறிகளில் அமைந்த நேரிய சமன்பாட்டு தொகுப்பிற்க்கு தீர்வு காணும் படிநிலைகள்
படி 1: 3 சமன்பாடுகளிலிருந்து ஏதேனும் 2 சமன்பாடுகளைக் எடுதுக்கொள்வோம். மற்றும் மாறிகளை விட்டுவிட்டு, ஏதேனும் ஒரு மாறியை ரத்து செய்யும் வகையில் பொருத்தமான மதிப்புகளுடன் சமன்பாடுகளைப் பெருக்கவும். பின்பு சமன்பாடு x மற்றும் y அல்லது x மற்றும் z அல்லது y மற்றும் z ஆகிய ஏதேனும் இரண்டு மாறிகளைக் கொண்டு இருக்கும்.
படி 2: மீண்டும், 3 சமன்பாடுகளிலிருந்து ஏதேனும் 2 சமன்பாடுகளைக் எடுதுக்கொண்டு, முந்தைய சோடியில் நீக்கப்பட்ட அதே மாறியை நீக்கவும்.
படி 3: இப்போது, இரண்டு மாறிகள் கொண்ட 2 சமன்பாடுகள் உள்ளன.
படி 4: இந்த 2 சமன்பாடுகளை பிரதியிடல் அல்லது நீக்குதல் அல்லது குறுக்கு பெருக்கல் முறை போன்ற ஏதேனும் ஒரு முறையைப் பயன்படுத்தி தீர்க்கவும்.
படி 5: கொடுக்கப்பட்ட சமன்பாடுகளிள் ஏதேனும் ஒன்றில் இந்த 2 மாறிகளின் மதிப்பை பிரதியிட மூன்றாவது மாறியின் மதிப்பை பெறலாம்.
Important!
1. ஏதேனும் ஒரு படிநிலையில், 0 = 1 போன்ற தவறான சமன்பாட்டைப் பெற்றால், அந்த சமன்பாட்டுத் தொகுப்பு ஒருங்கமைவற்றது மற்றும் தீர்வு இல்லை.
2. 0 = 0 போன்ற சமன்பாட்டைப் பெற்றால், சமன்பாட்டுத் தொகுப்பு ஒருங்கமைவுடையது மற்றும் எண்ணற்ற தீர்வுகளைக் கொண்டிருக்கும்.