PDF chapter test TRY NOW

1. தாத்தா, தந்தை மற்றும் வாணி ஆகிய மூவரின் சராசரி வயது \(53\). தாத்தாவின் வயதில் பாதி, தந்தையின் வயதில் மூன்றில் ஒரு பங்கு மற்றும் வாணியின் வயதில் நான்கில் ஒரு பங்கு ஆகியவற்றின் கூடுதல் \(65\). நான்கு ஆண்டுகளுக்கு முன் தாத்தாவின் வயது வாணியின் வயதைபோல் நான்கு மடங்கு எனில் மூவரின் தற்போதைய வயதைக் காண்க?
  
விடை:
 
வாணியின் வயது  வருடங்கள்.
 
வாணியின் தந்தையின் வயது  வருடங்கள்.
 
வாணியின் தாத்தாவின் வயது  வருடங்கள்.
 
2. ஒரு மூவிலக்க எண்ணில், இலக்கங்களின் கூடுதல் 11. இலக்கங்களை இடமிருந்து வலமாக வரிசை மாற்றினால் புதிய எண் பழைய எண்ணின் ஐந்து மடங்கைவிட \(46\) அதிகம். பத்தாம் இட இலக்கத்தின் இரு மடங்கோடு நூறாம் இட இலக்கத்தைக் கூட்டினால் ஒன்றாம் இட இலக்கம் கிடைக்கும் எனில் அந்த மூவிலக்க எண்ணைக் காண்க.  
 
விடை:
 
அந்த மூவிலக்க எண்.
 
3. ஐந்து, பத்து மற்றும் இருபது ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு \(₹105\) மற்றும் மொத்த நோட்டுகளின்  எண்ணிக்கை \(12\). முதல் \(2\) வகை நோட்டுகளின்  எண்ணிக்கையை இடமாற்றம் செய்தால் முந்தைய மதிப்பை விட \(₹20\) அதிகரிக்கிறது எனில், எத்தனை ஐந்து, பத்து மற்றும் இருபது ரூபாய் நோட்டுகள் உள்ளன?
 
விடை:
 
\(₹5\) நோட்டுகளின்  எண்ணிக்கை  .
 
\(₹10\) நோட்டுகளின்  எண்ணிக்கை .
 
\(₹20\) நோட்டுகளின்  எண்ணிக்கை .