PDF chapter test TRY NOW

ஒரு எண்ணின் வர்க்கமூலம்:
 
கொடுக்கப்பட்ட மிகை மெய்யெண்ணின் வர்க்கமூலமானது, எந்த எண்ணை அதே எண்ணால் பெருக்கினால் கொடுக்கப்பட்ட மிகை மெய்யெண் கிடைக்கிறதோ அந்த எண் வர்க்கமூலம் என  வரையறுக்கப்படுகிறது.
Example:
64 இன் வர்க்கமூலம் 8.
 
அதாவது, \sqrt{64} = \sqrt{8 \times 8} = \sqrt{8^2} = 8
பல்லுறுப்புக் கோவையின் வர்க்கமூலம்:
 
கொடுக்கப்பட்ட கோவை p(x)-இன் வர்க்கமூலமானது கோவை q(x), எப்பொழுது இந்த கோவையை தன்னுடன் பெருக்கினால் கொடுக்கப்பட்ட கோவை p(x) கிடைக்குமோ  அப்பொழுது q(x) வர்க்கமூலம் என வரையறுக்கப்படுகிறது.
 
அதாவது, p(x) = q(x) \times q(x)
எனவே, \sqrt{p(x)} = |q(x)| இங்கு |q(x)| ஆனது q(x)-யின் மட்டு மதிப்பு ஆகும்.
 
ஒரு பல்லுறுப்புக்கோவையின் வர்க்க மூலத்தை இரண்டு முறைகளைப் பயன்படுத்தி காண முடியும்.
 
அவையாவன:
 
1. காரணிப்படுத்தல் முறை (Factorization method)
 
2. வகுத்தல் முறை (Long division method)