PDF chapter test TRY NOW

முந்தைய வகுப்பில், நாம் இயல் எண்களைப் பற்றி கற்றுக்கொண்டோம்.
இயல் எண்கள் : \(1, 2, 3,\) .... இவை நேர்மறை எண்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
எதிர்மறை எண்களைப் பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
 
ஆம், இந்த எண்களை நாம் அன்றாட வாழ்வில். பார்திருக்கிறோம்.
எதிர்மறை எண்கள் : \(−1, −2, −3\), .... அவை பூஜ்ஜியத்திற்கு கீழே வருகின்றன.
முழு எண்களைப் பற்றியும் நாம் அறிவோம்.
முழு எண்கள் : \(0, 1, 2\), .... இது எதிர்மறை அல்லாத எண்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்போது, முழுக்களை பற்றி காண்போம்.
பூஜ்ஜியத்தையும் சேர்த்து, நேர்மறை மற்றும் எதிர்மறை எண்களின் தொகுப்பே முழுக்கள் ஆகும். பொதுவாக, இது \(−3, −2, −1, 0, 1, 2, 3\), ... என  எழுதப்படும். இதன் எண் தொகுப்பை '\(Z\)' என்ற எழுத்தாள்  குறிப்பிடுகிறோம்.
Mathematics - 2021-09-30T193630.343.png
முழு எண்கள் பற்றிய சில தகவல்கள்:
1. மிகை மற்றும் குறை எண்களின் தொகுப்பானது 'குறியீட்டு எண்கள்' எனப்படும். இந்த குறியீட்டு எண்கள், 'திசை எண்கள்' எனவும் அழைக்கப்படும்.
 
2. ஒரு எண்ணுக்கு அடையாள குறி இல்லை என்றால், அது ஒரு நேர்மறை எண்.
 
3. ஒரு எண்ணுக்கு முன்னால் உள்ள '\(-\)' குறி 'எதிர்மறை' அல்லது 'கழித்தல்' என வாசிக்கப்படுகிறது. உதாரணமாக, எண் \(−1\) ஆனது, கழித்தல் \(1\) அல்லது எதிர்மறை \(1\) என படிக்கப்படுகிறது.