PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo

பொதுவான விதி:

ஒரு எண் 1, 2, 3 அல்லது 4 போன்ற எண்களோடு முடிவடைந்தால், எண்ணைக் கீழ் எண்ணால் முழுமையாக்க வேண்டும். (அதற்கு கீழ் உள்ள  பத்துகளால்).

எண் 5, 6, 7, 8 அல்லது 9 உடன் முடிவடைந்தால், எண்ணை அடுத்த பெரிய அளவால் முழுமையாக்க வேண்டும்.(அதற்கு மேல் உள்ள பத்துகளால்)

13 மற்றும் 18 எண்களைக் கவனியுங்கள்.
 
எண்களை அருகில் உள்ள பத்துகளுக்கு முழுமையாக்குவோம்.
 
முதலில் 13 எடுத்துக்கொள்வோம்.13 ஆனது 3 உடன் முடிவடைகிறது.
 
இங்கே பத்துகள் இலக்கம் 1, மற்றும் அலகு இலக்கம் 3, இது 5 ஐ விட குறைவாக உள்ளது (3<5).
 
எனவே பத்துகளை மாற்றாமல் விட்டுவிட்டு, 1 இன் வலதுபுறத்தில் உள்ள இலக்கங்களை பூச்சியமாக மாற்றவும்.
 
அதாவது 13 என்ற எண்ணை 10 ஆக முழுமையாக்க வேண்டும்.
 
அடுத்து 18, 18 ஆனது 8 உடன் முடிவடைகிறது. இங்கே பத்துகளில் 1, மற்றும் அலகு இலக்கம் 8, இது 5ஐ விட அதிகமாகும் (8>5).
 
பத்துகள் இலக்கத்தின் வலது புற எண் 8ஐ விட அதிகமாக இருப்பதால், பத்துகள் இலக்கத்துடன் 1 ஐ சேர்க்கவும். அதாவது 1+1=2.
 
இப்போது 2 இன் வலதுபுறத்தில் உள்ள இலக்கங்களை சுழியமாக மாற்றவும்.
 
அதுவே 20ல் 18 என்ற எண் முழுமையாகும்.
 
எண் கோட்டில் இதை பொருத்திப் பாப்போம்.
 
13_18.svg

எண் 13, 20 ஐ விட 10 க்கு அருகில் உள்ளது, மேலும் 18 எண் 10 ஐ விட 20 க்கு அருகில் உள்ளது.
 
எனவே, 13 மற்றும் 18 இன் அருகிலுள்ள பத்துகள்  10 மற்றும் 20 ஆகும்.
படிநிலை 1: பத்துகள் இலக்கத்தில் உள்ள எண்ணைக் கண்டறியவும்.

படிநிலை 2: அதன் வலதுபுறத்தில் உள்ள இலக்கத்தை சரிபார்க்கவும்.
 
படிநிலை 3: அந்த இலக்கமானது 5 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால், பத்தாவது இடத்து எண்ணுடன் 1 ஐச் சேர்க்கவும். குறைவாக இருந்தால் அப்படியே விடவும்.
 
படிநிலை 4: பத்துகள் இலக்கத்தின் வலதுபுறத்தில் உள்ள இலக்கத்தை சுழியமாக மாற்றவும்.
29 ஐ அருகில் உள்ள பத்துக்களுக்கு முழுமையாக்கவும்.
 
29 இன் முழுமையான எண் = 30.