PDF chapter test TRY NOW
ஒரு எண்ணை அருகிலுள்ள நூறுக்கு முழுமையாக்கும் செயல்முறையைப் பார்ப்போம்.ஒரு எண்ணை முழுமையாக்க முன்னதைப்போலவே இதிலும் \(4\) படிநிலைகள் உள்ளன.
படிநிலை 1: நூறாவது இட மதிப்பில் உள்ள எண்ணைக் காண்க.
படிநிலை 2: அதன் வலது பக்க பத்தாம் இட மதிப்பு எண்ணைப் பார்க்க.
படிநிலை 3: அந்த இலக்கமானது \(5\) அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால், நூறாவது இடத்து எண்ணுடன் \(1\)ஐச் சேர்க்கவும். குறைவாக இருந்தால் அப்படியே விடவும்.
படிநிலை 4: நூறுக்கள் இலக்கத்தின் வலதுபுறத்தில் உள்ள எல்லா இலக்கங்களையும் சுழியமாக மாற்றவும்.
Example:
\(1780\) ஐ எடுத்து கொள்வோம்.
இதில் உள்ள நூறாவது இடமதிப்பைக் காண்க - \(7\).
இதன் வலதுபுற எண் \(8\).
அதாவது \(5\) ஐ விட அதிகம். அதனால் நூறுகள் இடத்தில் உள்ள \(7\) உடன் ஒன்றைச் சேர்த்து, அதன் பின் உள்ள எண்களை சுழியமாக்கி \(1800\) என்று முழுமையாக்க வேண்டும்.
இப்போது \(3749\) என்ற எண்ணை அருகிலுள்ள நூறுகளாக மற்றும் பத்துகளாக முழுமையாக்க முயற்சிக்கவும்.
\(3749\) அருகிலுள்ள நூறுகளாக்கினால் \(3700\) என ஆகும்.
\(3749\) அருகிலுள்ள பத்துகள் மதிப்பீடு \(3750\) ஆகும்.