PDF chapter test TRY NOW

  • இந்திய எண் முறை
  • பன்னாட்டு எண் முறை
இந்திய எண் முறை:
நமது இந்திய எண் முறையில்,நாம் காற்புள்ளிகளை வலப்புறத்திலிருந்து பயன்படுத்துகிறோம்.
 
முதல் காற்புள்ளி நூறுகள் இடத்திற்கு முன் வரும் (வலதுபுறத்திலிருந்து 3 இலக்கங்கள்).
 
இரண்டாவது காற்புள்ளி பத்தாயிரங்களின் இடத்திற்கு முன் வரும் (வலது புறத்திலிருந்து 5 இலக்கங்கள்).
 
மூன்றாவது காற்புள்ளி பத்து இலட்சங்களின் இடத்திற்கு முன் வரும் (வலது புறத்திலிருந்து 7 இலக்கங்கள்) மட்டும் கோடிக்கு முன் வரும்.
.
பன்னாட்டு எண் முறை:
பன்னாட்டு எண் முறையில், நாம் ஒன்றுகள், பத்துகள், நூறுகள், ஆயிரங்கள் மில்லியன்கள் மற்றும் பில்லியன்கள் என பயன்படுத்துகிறோம்.
 
 ஆயிரங்கள், மில்லியன்கள் மற்றும் பில்லியன்களுக்கு
நாம் காற்புள்ளியைப் பயன்படுத்துகிறோம்.
 
பின்வரும் அட்டவணையின் மூலம் நாம் இந்திய மற்றும் பன்னாட்டு எண் முறைகளை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
 
இந்திய எண் முறைஎண்ணுருக்கள்பன்னாட்டு முறைஎண்ணுருக்கள்
ஒன்று1ஒன்று1
பத்து10பத்து10
நூறு100நூறு100
ஆயிரம்1000ஆயிரம்1000
பத்தாயிரம்10000பத்தாயிரம்10000
இலட்சம்100000நூறு ஆயிரம்100000
பத்து இலட்சம்
1000000
மில்லியன்1000000
கோடி10000000பத்து மில்லியன்10000000
பத்துக் கோடி100000000நூறு மில்லியன்100000000
நூறு கோடி1000000000பில்லியன்1000000000
ஆயிரம் கோடி10000000000பத்து பில்லியன்10000000000
 
அட்டவணையின் உதவியால் நாம் 573400005,73,40,000 (ஐந்து கோடியே எழுபத்தி மூன்று இலட்சத்து நாற்பதாயிரம்) என்று இந்திய முறையிலும்.
 
57,340,000 (ஐம்பத்து ஏழு மில்லியன் முன்னூற்று நாற்பதாயிரம்) என்று பன்னாட்டு முறையிலும் படிக்கலாம்.
பெரிய எண்களை எளிதாக படிக்கவும், எழுதவும் உதவும் வகையில் எண்களுக்கு காற்புள்ளிகள் வைக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டு:

35687941523 இந்திய எண் முறை மற்றும் பன்னாட்டு எண் முறையில் காற்புள்ளியைப் பயன்படுத்தி எழுதுக:
 
தீர்வு :
  
இந்திய எண் முறை:
இந்திய எண் அமைப்பில், நூறுகளின் இடத்திற்கு முன் காற்புள்ளி ஆனது  வைக்கப்படுகிறது. ஒவ்வொரு இரண்டு இலக்கங்களுக்கும் பிறகு காற்புள்ளிகள் வைக்கப்படும்.
இதன்படி 35687941523 ஆனது இந்திய எண் முறையின் படி 35,68,79,41,523 என எழுதலாம்.
 
பன்னாட்டு எண் முறை:
பன்னாட்டு எண் அமைப்பில், நூறுகளின் இடத்திற்கு பிறகு, முதல் காற்புள்ளி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு மூன்று இலக்கங்களுக்கு பிறகு காற்புள்ளிகள் வைக்கப்படும்.
அதே எண்ணுக்கு 35687941523  பன்னாட்டு எண் முறையின்படி காற்புள்ளி ஆனது 35,687,941,523 என எழுதலாம்.