PDF chapter test TRY NOW
கொடுக்கப்பட்ட ஓர் எண்ணை மீதியின்றி வகுக்கும் ஓர் எண்ணானது அதன் ‘காரணி’ ஆகும்.
Example:
\(12\) என்ற எண்ணை எடுத்துக் கொள்வோம்.
\(12\) கீழ்கண்டவாறு இரு எண்களின் பெருக்கற்பலனாக எழுத முடியும்.
இதிலிருந்து, \(12\) இன் காரணிகள் \(1\), \(2\), \(3\), \(4\), \(6\), மற்றும் \(12\) என்பதை அறியலாம்.
காரணிகள் பற்றிய சில கூறுகள்:
- \(1\) என்ற எண் அனைத்து எண்ணிற்கும் காரணியாக அமையும்.
- எந்த ஒரு எண்ணின் காரணியும் அந்த எண்ணை மீதியின்றி வகுக்கும்.
- ஓர் எண்ணின் ஒவ்வொரு காரணியும், அந்த எண்ணின் மதிப்பிற்குக் குறைவாகவோ அல்லது சமமாகவோ இருக்கும்.
- எந்த ஒரு எண்ணிற்கும் முடிவுறு அளவிலான காரணிகள் மட்டுமே இருக்க முடியும்.