PDF chapter test TRY NOW
ஒரு தட்டில் \(12\) இனிப்புகள் உள்ளன.
\(4\) தட்டுகளில் மொத்தம் எத்தனை இனிப்புகள் இருக்கும்.
மொத்த எண்ணிக்கை\(=\) இனிப்புகள்.
ஒரு வேளை \(6\) தட்டுகள் இருந்தால் மொத்த இனிப்புகளின் எண்ணிக்கை எவ்வளவு?
எனவே, \(6\) தட்டுகளின் உள்ள மொத்த இனிப்புகள்
எனவே, இனிப்புகளின் மொத்த எண்ணிக்கையைக் காண தட்டுகளின் எண்ணிக்கையை \(12\) உடன் பெருக்க வேண்டும்.
அவ்வாறு பெருக்கும்போது இனிப்புகளின் எண்ணிக்கை \(12\) மடங்காக அமைவதைக் காண முடிகிறது.
ஒரு எண்ணின் மடங்கு என்பது அந்த எண்ணை ஒரு முழு எண்ணால் கிடைக்கும் மதிப்பு ஆகும்.
Example:
1. \(2\) இன் மடங்குகள் \(2\), \(4\), \(6\), \(8\), \(10\), \(12\) ...
2. \(5\) இன் மடங்குகள் \(5\), \(10\), \(15\), \(20\), \(25\), \(30\) ...
Important!
மடங்குகள் பற்றிய சில தகவல்கள்:
- ஓர் எண்ணின் ஒவ்வொரு மடங்கும் அந்த எண்ணை விட அதிகமாகவோ அல்லது சமமாகவோ இருக்கிறது.
- ஒரு எண்ணிற்கு முடிவிலா எண்ணிக்கையில் மடங்குகள் இருக்கும்.
- எந்த ஒரு எண்ணும் அந்த எண்ணிற்கு மடங்காக அமையும்.