PDF chapter test TRY NOW
6 ஆல் வகுப்படும் தன்மை: ஒரு எண் 2 மற்றும் 3 ஆல் வகுப்படும் எனில் அந்த எண் 6 ஆல் வகுப்படும்.
Example:
1. 246 என்ற எண் 6 வகுபடுமா எனச் சரிபார்க்கவும்.
தீர்வு:
6 ஆல் வகுப்படும் தன்மை: ஒரு எண் 2 மற்றும் 3 ஆல் வகுப்படும் எனில் அந்த எண் 6 ஆல் வகுப்படும்.
கொடுக்கப்பட்ட எண் 6 இல் முடிவடைகிறது.
எனவே, கொடுக்கப்பட்ட எண் 2 ஆல் வகுப்படும்.
மேலும், கொடுக்கப்பட்ட எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 2+4+6=12.
12 ஆனது 3 ஆல் வகுப்படும்.
எனவே, 246 ஆனது 3 ஆல் வகுப்படும்.
இதன்மூலம் 246 ஆனது 2 மற்றும் 3 ஆல் வகுபடுகிறது என அறிய முடிகிறது.
எனவே, 246 ஆனது 6 ஆல் வகுப்படும்.
2. 154 என்ற எண் 6 ஆல் வகுப்படுமா எனச் சரிபார்க்கவும்.
6 ஆல் வகுப்படும் தன்மை: ஒரு எண் 2 மற்றும் 3 ஆல் வகுப்படும் எனில் அந்த எண் 6 ஆல் வகுப்படும்.
154 என்ற எண் 4 இல் முடிகிறது.
எனவே, கொடுக்கப்பட்ட எண் 2 ஆல் வகுப்படும்.
மேலும், கொடுக்கப்பட்ட எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 1+5+4=10.
இங்கு, 10 ஆனது 3 ஆல் வகுபடாது.
எனவே, 154 ஆனது 3 ஆல் வகுபடாது.
ஆகவே, 154 ஆனது 6 ஆல் வகுபடாது.