PDF chapter test TRY NOW
\(7\) ஆல் வகுப்படும் தன்மை: ஒரு எண்ணின் இறுதி இலக்கத்தின் இரு மடங்கை அந்த எண்ணின் மற்ற எண்ணிலிருந்து கழிக்க கிடைக்கும் எண் \(7\) ஆல் வகுபடும் எனில் கொடுக்கப்பட்ட எண் \(7\) ஆல் வகுப்படும்.
Example:
1. \(2548\) என்ற எண் \(7\) ஆல் வகுப்படுமா எனச் சரிபார்க்கவும்.
தீர்வு:
\(7\) ஆல் வகுப்படும் தன்மை: ஒரு எண்ணின் இறுதி இலக்கத்தின் இரு மடங்கை அந்த எண்ணின் மற்ற எண்ணிலிருந்து கழிக்க கிடைக்கும் எண் \(7\) ஆல் வகுபடும் எனில் கொடுக்கப்பட்ட எண் \(7\) ஆல் வகுப்படும்.
கொடுக்கப்பட்ட எண்ணின் இறுதி இலக்கம் \((8\)\)
எனவே, இறுதி இலக்கத்தின் இரு மடங்கு, \(2\times 8 =16\).
மேலும், இறுதி இலக்கத்தின் இரு மடங்கை மற்ற எண்ணிலிருந்து கழிக்க கிடைப்பது, \(254-16 = 238\).
இப்போது, \(238\div 7 = 34\).
எனவே, \(2548\) ஆனது \(7\) ஆல் வகுப்படும்.
2. \(810\) என்ற எண் \(7\) ஆல் வகுபடுமா எனச் சரிபார்க்கவும்.
தீர்வு:
\(7\) ஆல் வகுப்படும் தன்மை: ஒரு எண்ணின் இறுதி இலக்கத்தின் இரு மடங்கை அந்த எண்ணின் மற்ற எண்ணிலிருந்து கழிக்க கிடைக்கும் எண் \(7\) ஆல் வகுபடும் எனில் கொடுக்கப்பட்ட எண் \(7\) ஆல் வகுப்படும்.
கொடுக்கப்பட்ட எண்ணின் இறுதி இலக்கம் \(0)
எனவே, இறுதி இலக்கத்தின் இரு மடங்கு, \(2\times 0 = 0\).
மேலும், இறுதி இலக்கத்தின் இரு மடங்கை மற்ற எண்ணிலிருந்து கழிக்க கிடைப்பது, \( = 81- 0 = 81\).
இங்கு, \(81\div 7 \) என்பது மீதி \(4\) தருகிறது.
எனவே, \(810\) ஆனது \(7\) ஆல் வகுபடாது.