PDF chapter test TRY NOW
9 ஆல் வகுபடும் தன்மை: ஓர் எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 9 ஆல் வகுபடும் எனில், அந்த எண் 9 ஆல் வகுபடும்.
Example:
1. 42471 என்ற எண் 9 ஆல் வகுபடுமா எனச் சரிபார்க்கவும்.
தீர்வு:
9 ஆல் வகுபடும் தன்மை: ஓர் எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 9 ஆல் வகுபடும் எனில், அந்த எண் 9 ஆல் வகுபடும்.
42471 என்ற எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 4+2+4+7+1=18
இங்கு, 18 ஆனது 9 ஆல் வகுபடும்.
எனவே, 42471 என்ற எண் 9 ஆல் வகுபடும்.
2.4371 என்ற எண் 9 ஆல் வகுபடுமா எனச் சரிபார்க்கவும்.
தீர்வு:
9 ஆல் வகுபடும் தன்மை: ஓர் எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 9 ஆல் வகுபடும் எனில், அந்த எண் 9 ஆல் வகுபடும்.
4371 என்ற எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 4+3+7+1=15
இங்கு, 15 ஆனது 9 ஆல் வகுபடாது.
எனவே, 4371 ஆனது 9 ஆல் வகுபடாது.
10 ஆல் வகுபடும் தன்மை: ஒரு எண்ணின் இறுதி இலக்கம் 0 இல் முடிந்தால் அந்த எண் 10 ஆல் வகுபடும்.
Example:
1570 என்ற எண் 10 வகுபடுமா எனச் சரிபார்க்கவும்.
10 ஆல் வகுபடும் தன்மை:
ஓர் எண்ணின் ஒன்றாம் இலக்கம் பூச்சியம் எனில், அந்த எண் 10 ஆல் வகுபடும்.
இங்கு, இறுதி இலக்கம் 0.
எனவே, 1570 ஆனது 10 ஆல் வகுபடும்.