PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoபட விளக்கப்படம் என்பது தரவுகளை, படங்கள் மூலம் குறிப்பிடுவது ஆகும். இது ஆங்கிலத்தில் pictogram என்று அழைக்கப்படுகிறது.
ஒரு பழக்கடையின் ஒரு நாள் விற்பனைத் தரவை கீழே உள்ள அட்டவணைக் காட்டுகிறது. விற்பனையாளர் \(30\) ஆப்பிள்கள், \(15\) கொய்யா பழங்கள், \(20\) மாதுளை மற்றும் \(15\) வாழைப்பழங்களை விற்றார்.
பின்வரும் படத்தொகுப்பில், ஒரு முழுப் பழம் \(10\) பழங்களை பிரதிபலிக்கிறது, மற்றும் ஒரு பாதி பழம் \(5\) பழங்களைப் பிரதிபலிக்கிறது.
பின்வரும் படத்தொகுப்பில், ஒரு முழுப் பழம் \(10\) பழங்களை பிரதிபலிக்கிறது, மற்றும் ஒரு பாதி பழம் \(5\) பழங்களைப் பிரதிபலிக்கிறது.
பழங்களின் பெயர் | பழங்களின் எண்ணிக்கை - நேர்க்கோட்டுக்குறி | படவிளக்கம் |
ஆப்பிள் | \(30\) - | |
கொய்யாப் பழம் | \(15\) - | |
மாதுளை | \(20\) - | |
வாழைப்பழம் | \(15\) - |
மேலே உள்ள அட்டவணையை நீங்கள் கவனித்தால், நேர்க்கோட்டுக்குறியைக் காட்டிலும் படவிளக்கமானது பார்வைக்கு மிகவும் எளிதானது. அதனால்தான் புள்ளிவிவரங்களில் தரவைப் பிரதிநிதித்துவப்படுத்த படவிளக்கங்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
படவிளக்கப்படத்தை விவரித்தல்:
மேலே உள்ள படத்தொகுப்பிலிருந்து, ஒரு பழக்கடையில் விற்கப்படும் பழங்களின் எண்ணிக்கையைப் பெறலாம்.
1. விற்பனையான ஆப்பிள்களின் எண்ணிக்கை \(=\) \(3\) முழு பழங்கள், அதாவது \(3 × 10 = 30\).
2. விற்பனையான கொய்யாவின் எண்ணிக்கை \(=\) \(1\) முழு பழம் மற்றும் \(1\) பாதி பழம், அதாவது \(1 × 10 + 1 × 5 = 25\).
3. விற்பனையான மாதுளைகளின் எண்ணிக்கை \(=\) \(2\) முழு பழங்கள் அதாவது \(2 × 10 = 20\).
4. விற்பனையான வாழைப்பழங்களின் எண்ணிக்கை \(=\) \(1\) முழு பழம் மற்றும் \(1\) பாதி பழம், அதாவது \(1 × 10 + 1 × 5 = 15\).