PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஒருபட்டை வரைபடம் என்பது (செங்குத்து அல்லது கிடைமட்ட) இணைப் பட்டைகள் சம நீளங்களிலும் / சம உயரங்களிலும் கொடுக்கப்பட்ட எண்ணிக்கைக்கு விகிதத்தில் அமைந்துள்ளவை ஆகும்.
Important!
நினைவில் கொள்ள வேண்டியவை:
1. பட்டையின் நீளம் என்பது நிகழ்வெண் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அளவைப் பொறுத்தது.
2. ஒவ்வொரு பட்டையின் அகலமும் ஒன்றுதான்.
3. எந்த இரண்டு பட்டைகளுக்கும் இடையே உள்ள இடைவெளியும் ஒன்றுதான்.
பட்டை வரைபடம் வரைதல்
படி 1: காகிதத்தில் பொருத்தமான இடத்தில் இரண்டு செங்குத்து கோடுகளை வரையவும், அவற்றில் ஒன்று கிடைமட்டமாகவும் மற்றொன்று செங்குத்தாகவும் இருக்கும்.
படி 2: தரவுகளுக்கேற்றத் தலைப்பை (விருப்பமான பனிக்கூழ்) கொடுக்கவும். கிடைமட்டக் கோட்டிற்கான (\(x\)-அச்சு) தலைப்பு (ஆட்களின் எண்ணிக்கை) மற்றும், செங்குத்துக் கோட்டிற்கான (\(y\)-அச்சு ) தலைப்புகளைக் (பனிக்கூழின் வகைகள்) கொடுக்கவும்.
படி 3: பொருத்தமான அளவுத்திட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும். அதாவது, \(1\) அலகு \(=\) \(10\) ஆட்கள்.
படி 3: பொருத்தமான அளவுத்திட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும். அதாவது, \(1\) அலகு \(=\) \(10\) ஆட்கள்.
படி 4: செங்குத்துக் கோடு ‘\(0\)’ இல் தொடங்குமாறு எடுத்துக்கொள்வோம் மற்றும் தரவுகளின் மதிப்புகள் அளவுத்திட்டத்தின்படி சமத் தொலைவில் இருக்குமாறு குறிக்கவேண்டும
படி 5: ஒவ்வொரு தகவலுக்கும் கிடைமட்டக் கோட்டின் மீது செங்குத்துப் பட்டைகள் வரையப்படுகின்றன. அவற்றுக்கான தகவல்களை \(A\), \(B\), \(C\)மற்றும் \(D\)எனக் குறித்துக் கொள்க.
படி 5: ஒவ்வொரு தகவலுக்கும் கிடைமட்டக் கோட்டின் மீது செங்குத்துப் பட்டைகள் வரையப்படுகின்றன. அவற்றுக்கான தகவல்களை \(A\), \(B\), \(C\)மற்றும் \(D\)எனக் குறித்துக் கொள்க.
இந்த வரைபடம் செங்குத்து வரைபடம் எனப்படும்.
இதுபோன்றே கிடைமட்டப் பட்டை வரைபடமும் வரையலாம்.