PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
தரவு என்பது தகவலின் தொகுப்பு என்பதை நாம் அறிந்தோம். ஆனால், தரவு சேகரிக்கப்படும் விதத்தைப் பொறுத்து இரண்டு வழிகளில் தரவை வகைப்படுத்தலாம்.
 
  • முதல் நிலைத் தரவுகள்
  • இரண்டாம் நிலைத் தரவுகள்
முதல் நிலைத் தரவுகள்
மூலத்தரவிலிருந்து புதிதாகச் சேகரிக்கப்பட்ட தொகுக்கப்படாத தகவல்கள் முதல் நிலைத் தரவு எனப்படும். மேலும் இத்தரவுகள் அட்டவணைப்படுத்துதல், வரிசைப்படுத்துதல் மற்றும் வகைப்படுத்துதல் போன்ற புள்ளிவிவர செயல்முறைகளுடன் உட்படாத தரவுகளாகும்.
Example:
1. வேளாண்மைத்துறை மாணவர்கள் பல்வேறு வகையான தாவர மாதிரிகளை சேகரித்தனர்.
 
2. மக்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் பற்றிய தகவல்களை மக்களிடம் ஊடகங்கள் சேகரித்தன.
 
3. வகுப்பில் வராதவர்களின் பட்டியலை ஒரு ஆசிரியர் சேகரித்தார்.
 
4. உணவு உற்பத்தி நிறுவனத்தால் மாணவர்களின் உணவுப் பழக்கம் குறித்த கணக்கெடுப்பு.
இரண்டாம் நிலைத் தரவுகள்
வேறு சில நோக்கங்களுக்காக, யாரேனும் திரட்டிய தரவுகளிலிருந்து பெறப்படும் தகவல்கள், இரண்டாம் நிலைத் தரவு எனப்படும். மேலும் இது நேரடியாக மூலத்தரவிலிருந்து சேகரிக்கப்படவில்லை.
Example:
1. உள்ளூர் செய்தி சேனல்கள் சர்வதேசச் செய்தி சேனலில் இருந்து தரவை சேகரிக்கின்றன.
 
2. பள்ளியின் தலைமையாசிரியர் அனைத்து வகுப்பு ஆசிரியர்களிடமிருந்தும் பள்ளி முதல்நிலை மாணவர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கிறார்.
Important!
முதல்நிலை தரவுகள் இரண்டாம் நிலை தரவுகளைவிட நம்பகத்தன்மை வாய்ந்தவை. ஏனெனில், அவை நேரடியாகச் சேகரிக்கப்படுகிறது.